ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் முன்னாள் கேப்டன் கவுதம் காம்பிர், இனி விளையாட இருக்கும் போட்டிகளுக்கான ரூ. 2.8 கோடி சம்பளத்தை வாங்காமல் விளையாட உள்ளார்.
ஐபிஎல் தொடர் போட்டிகள் கடந்த 7-ம் தேதி தொடங்கியது. இதில் சென்னை, டெல்லி, மும்பை, ஐதராபாத், கொல்கத்தா, பஞ்சாப், பெங்களூரு, ராஜஸ்தான் ஆகிய எட்டு அணிகள் கலந்துகொண்டுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் இரண்டு முறை மோத வேண்டும். லீக் போட்டிகளின் முடிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும்.
இதையடுத்து தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்று டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் கவுதம் காம்பிர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இதையடுத்து டெல்லி அணியின் புதிய கேப்டனாக ஷ்ரேயாஸ் அய்யர் நியமிக்கப்பட்டுள்ளார். இதனிடையே இந்த சீசன் ஐபிஎல் தொடரில் டெல்லி அணி இனி விளையாட இருக்கும் போட்டிகளில் சம்பளம் வாங்காமல் விளையாட காம்பிர் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் ரூ. 2.8 கோடி சம்பளத்தை அணிக்காக அவர் உதறியுள்ளார்.
No comments:
Post a Comment