மாவீரன் குருவுக்கு டிரக்கியாஸ்டமி சிகிச்சை: சுவாசிப்பதில் சிரமம் குறைந்தது! - Agnipuratchi

மாவீரன் குருவுக்கு டிரக்கியாஸ்டமி சிகிச்சை: சுவாசிப்பதில் சிரமம் குறைந்தது!

Share This

உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாவீரன்  குரு அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகளை  பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களும், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தினமும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைகளை பார்த்து வருகிறார். மருத்துவர் அய்யா அவர்கள் நேற்றும், நேற்று முன்நாளும் மருத்துவமனைக்கு சென்று மாவீரன் குரு அவர்களை பார்த்ததுடன், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் விசாரித்தார்.

அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்களுடன் மருத்துவர் அய்யா அவர்களும், அன்புமணி இராமதாஸ் அவர்களும் நடத்திய ஆலோசனையின் போது, மாவீரன் குரு அவர்களுக்கு ஏற்பட்டுள்ள சுவாசப் பிரச்சினையை தீர்க்க நடு மூச்சுக்குழலில் அறுவை சிகிச்சை செய்து சுவாசிக்கச் செய்யும் டிரக்கியாஸ்டோமி (Tracheostomy) சிகிச்சை செய்யலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. அதன்படி அவருக்கு நேற்று பிற்பகலில் டிரக்கியாஸ்டோமி அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. மருத்துவர் பாபு மனோகர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் இந்த சிகிச்சையை வெற்றிகரமாக செய்தனர். மருத்துவர் பரத், மருத்துவர் ஜெய்கணேஷ் உள்ளிட்ட மருத்துவர்களும் சில மணி நேரம் நீடித்த இந்த அறுவை சிகிச்சையின் போது உடனிருந்தனர்.

டிரக்கியாஸ்டோமி சிகிச்சை காரணமாக மாவீரன் குரு மூச்சு விடுவதில் இருந்த சிரமம் பெருமளவில் குறைந்துள்ளது.  அவரது உடல்நிலையை  முன்னேற்ற மருத்துவர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து தீவிர மருத்துவம் அளித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages