குருவுக்கு தொடர்ந்து  தீவிர சிகிச்சை - Agnipuratchi

குருவுக்கு தொடர்ந்து  தீவிர சிகிச்சை

Share This

பா.ம.க. தலைமை நிலைய பத்திரிகை செய்தி
மாவீரன் குருவுக்கு தொடர்ந்து  தீவிர
சிகிச்சை: மருத்துவர் ராமதாஸ் பார்த்தார்.

  உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள  குரு அவர்களை பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் நேற்றிரவு நேரில் சென்று பார்த்தார். அவரது உடல்நிலை பற்றி அவருக்கு மருத்துவம் அளிக்கும் மருத்துவர்களிடம் விரிவாக கேட்டறிந்தார். அப்போது மாவீரன் குரு அவர்களின் குடும்பத்தினரும் உடனிருந்தனர்.

  மாவீரன் குரு அவர்களுக்கு மூத்த மருத்துவர் ராஜ்.பி.சிங் தலைமையிலான மருத்துவர்கள் குழு தொடர்ந்து தீவிர மருத்துவம் அளித்து வருகிறது. மருத்துவர் அய்யா அவர்களும், மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களும் மருத்துவர்களிடம் தொடர்ந்து தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தி வருகின்றனர். இவ்வாறு பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages