ஜூன் 1ம் தேதி முதல் அரசு பள்ளியில் படிக்கும் 9, 10, 11, 12ம் வகுப்பு மாணவ, மாணவிகள் புதிய நிற சீருடையில் பள்ளிக்கு வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஒரே வகையான வகுப்புகளுக்கு ஏற்றவாறு புதிய நிறத்தில் சீருடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2018-19ம் கல்வியாண்டு முதல் 9ம் மற்றும் 10ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு சாம்பல் நிற வண்ணத்தில் முழு கை சட்டையும், இளஞ்சிவப்பு நிற கோடிட்ட மேல் சட்டையும், மாணவிகளுக்கு கூடுதலாக இதன்மேல் சாம்பல் நிற கோட்டும் அணிய வேண்டும். 11ம் மற்றும் 12ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கருநீல நிற வண்ணத்தில் முழு கை சட்டையும், கருநீலநிறக் கோடிட்ட மேல் சட்டையும், மாணவிகளுக்கு கூடுதலாக இதன் மேல் கருநீலநிறக் கோட்டும் அணிய வேண்டும்.
இந்த சீருடைகள் வரும் 1ம் தேதி பள்ளி திறக்கும் நாள் அன்று அனைத்து மாணவ, மாணவிகளும் அணிந்து வர வேண்டும் என்று பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: பள்ளிக்கல்வி துறை சார்பில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள சீருடை மாதிரிகள் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 1முதல் 8ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் இலவச சீருடைகள் இரண்டு செட், பள்ளி திறக்கும் நாளில் வழங்கப்படும். பள்ளி சீருடைகளை பொறுத்தவரை அரசு தெரிவித்தப்படிதான் சீருடை இருக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.
கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் - டெக்னாலஜி பாடங்கள் மேல்நிலை தொழிற்கல்வி பாடப்பிரிவுகளில் கணினி பாடம் சேர்ப்பு
தமிழகத்தில் மேல்நிலை தொழிற்கல்வி மற்றும் கலை பாட பிரிவுகளில் கணினி பாடம் சேர்க்கப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டு பிளஸ் 1 மாணவர் சேர்க்கையில் இதனை கடைபிடிக்க பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
1 முதல் 12ம் வகுப்பு வரையான பாட திட்டத்தை மாற்றும் பணியை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இப்பாட திட்டம் தரமானதாகவும், சிபிஎஸ்இ உள்ளிட்ட இதர கல்வி வாரியங்களின் பாட திட்டத்திற்கு மேலானதாகவும், அதே வேளையில் மொழிப்பாடங்கள், சமூக அறிவியல் பாடங்களில் தமிழகத்தின் மொழி, பண்பாடு, வரலாறு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இருக்கும். தமிழகத்தில் 12 வகையான தொழில்கல்வி பாடங்கள் மேல்நிலை வகுப்புகளில் கற்பிக்கப்பட்டு வருகிறது. தொழிற்கல்வி பிரிவு மாணவர்கள் உயர் கல்விக்கு செல்லவும், வேலைவாய்ப்பு பெறவும் வாய்ப்புகள் உள்ளன. இப்பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டு 8 ஆண்டுகள் ஆகிறது. இந்தநிலையில் வளர்ந்து வரும் தொழில்வளர்ச்சி சூழலுக்கு ஏற்ற வகையில் தொழிற்கல்விக்கான பாடங்கள் மாற்றப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தற்போது நடைமுறையில் உள்ள தொழிற்கல்வி மற்றும் கலைபிரிவு முதன்மை பாடங்களில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு மாநில பொதுப்பள்ளி கல்வி வாரியத்தால் ஒப்புதலும் வழங்கப்பட்டுவிட்டது. பாட மாற்ற விபரங்கள்:
* கணினி அறிவியல் (கம்ப்யூட்டர் சயின்ஸ்) என்ற பாட பிரிவு மட்டும் இருந்த நிலையில் இப்பாடம் வரும் கல்வியாண்டு முதல் மூன்று வகையாக அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் கணினி அறிவியல் (கம்ப்யூட்டர் ��
No comments:
Post a Comment