பிளஸ் 2 தேர்வு முடிவில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 லட்சம் மாணவர்கள் எழுதிய பிளஸ் 2 தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று வெளியிட்டார்.
இதைத்தொடர்ந்து http://tnresults.nic.in,
http://dge1.tn.nic.in இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியானது.
1 சதவீதம் குறைவு
அதன்படி, பிளஸ் 2 பொதுத்தேர்வில் 91.1% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவிகள் 94.1% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 87.7% தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவிகிதம் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 1% குறைந்துள்ளது.
97% தேர்ச்சி
பிளஸ் 2 தேர்வு முடிவில் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வில் 97% தேர்ச்சி விகிதத்தை விருதுநகர் மாவட்டம் பெற்றுள்ளது.
திருப்பூர் 3ஆம் இடம்
96.3 சதவீத தேர்ச்சியுடன் ஈரோடு மாவட்டம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. 96.1 சதவீத தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்டம் மூன்றாமிடத்தை பிடித்துள்ளது.
விழுப்புரம் கடைசி இடம்
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவில் விழுப்புரம் மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் 83. 35% தேர்ச்சி விகிதத்தை கொடுத்துள்ளது.
தேர்வு முடிவு - எஸ்எம்எஸ்
மாணவர்கள் தேர்வு முடிவை தெரிந்து கொள்ளும் வகையில் மதியம் 2 மணிக்குள் அவர்களின் கைப்பேசி எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 25ல் மறுதேர்வு
இதனிடையே பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு ஜூன் 25ஆம் தேதி மறு தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது


No comments:
Post a Comment