உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாவீரன் குரு அவர்களை சுவாசக்கருவி இல்லாமல் சுவாசிக்க வைக்கும் முயற்சியில் மருத்துவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதன் பயனாக அவரது உடல்நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. இன்று மொத்தம் 4 மணி நேரம் சுவாசக் கருவி இல்லாமல் மாவீரன் குரு அவர்கள் சுவாசித்தார்கள்.
மாவீரன் குரு அவர்களின் உடல்நிலையில் ஏற்படும் முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணித்து வரும் பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், இன்று அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று அவரைப் பார்த்தார். தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட வேண்டிய மருத்துவம் குறித்து அப்பல்லோ மருத்துவமனையின் தீவிர இருதய நோய் சிகிச்சை வல்லுனர் சாய் சதீஷ், நுரையீரல் சிகிச்சைப்பிரிவு மூத்த மருத்துவர் பாபு ஆப்ரஹாம், பல்துறை தீவிர சிகிச்சைப்பிரிவு மூத்த மருத்துவர் ரமேஷ் வெங்கட்ராமன், பல்துறை தீவிர சிகிச்சைப்பிரிவின் பொறுப்பு மருத்துவர் பரத், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை வல்லுனர்கள் சுந்தர், சுரேஷ், மூத்த மருத்துவர் நல்லியுவராஜ், நுரையீரல் சிகிச்சைப்பிரிவு மருத்துவர் கலைக்கோவன், ஆகிய மருத்துவர்கள் அடங்கிய குழுவுடன் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இன்று ஆலோசனை நடத்தினார். அதன்படி மாவீரன் குரு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment