மருத்துவர் ராமதாஸ் அறிக்கை குழந்தை கடத்தல் பீதியால் அப்பாவிகள் கொல்லப்படுவதை தடுக்க வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். - Agnipuratchi

மருத்துவர் ராமதாஸ் அறிக்கை குழந்தை கடத்தல் பீதியால் அப்பாவிகள் கொல்லப்படுவதை தடுக்க வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

Share This


குழந்தை கடத்தல் பீதியால் அப்பாவிகள் கொல்லப்படுவதை தடுக்க வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், திருவண்ணா மலை அருகே கோவிலுக்கு வழிபடச் சென்ற மூதாட்டி ஒருவர், குழந்தைகளை கடத்த வந்திருக்கலாம் என்ற அச்சத்தில் அடித்துக் கொல்லப்பட்ட நிகழ்வை குறிப்பிட்டுள்ளார். அதேபோல திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடடில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை, குழந்தையை கடத்த வந்தவராக கருதி அடித்துக் கொலை செய்த அப்பகுதி மக்கள், உடலை அங்குள்ள பாலத்தில் கட்டி தொங்க விட்டதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வேலூர் மாவட்டத்தின் பல இடங்களிலும் அப்பாவிகள் பலர் குழந்தைகளை கடத்த வந்தவர்கள் என்ற ஐயத்தில் கொடூரமாக தாக்கப்பட்டு மருத்துவமனை களில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மனித உரிமைகளையும், உயிர்களையும்  மதிக் காத இத்தகைய செயல்களை ஏற்றுக் கொள்ள முடியாது. இவை உடனடியாக தடுக்கப்பட வேண்டும். இவை அனைத்திற்கும்  கடந்த சில வாரங்களாக வட மாவட்டங்களில் பரவி வரும் வதந்திகள்தான் காரணம். வட மாநிலங்களை சேர்ந்த குழந்தைக் கடத்தல் கும்பல்கள் திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஊடுருவியிருப்பதாகவும், அவர்கள் குழந்தைகளை கடத்திச் செல்வதாகவும் பரவி வரும் வதந்திகளால் அச்சமடைந்த மக்கள், சந் தேகத்திற்கிடமான மனிதர்களை பார்த்தால் தாக்கத் தொடங்கியுள்ளனர். தமி ழகத்தில் வேலை செய்வதற்காக வந்துள்ள வடமாநில இளைஞர்கள், திருநங்கை கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோர்தான் இத்தகைய தாக்குதலுக்கு ஆளாகின்றனர். தங்களையே கவனித்துக் கொள்ளும் திறனற்றவர்களான மன நிலை பாதிக்கப்பட்டவர்களா குழந்தைகளை கடத்தப் போகிறார்கள்? என்ற யதார் த்தம் மக்களுக்கு உரைத்திருந்தால் இத்தகைய நிகழ்வுகள் நடந்திருக்காது. ஆனால், தங்களின் குழந்தைகளை கடத்திச் சென்று விடுவார்களோ? என்ற அச்சம் அவர்களின் சிந்திக்கும் திறனை செயல்படாமல் தடுத்து, உணர்வுகளின் அடிப்படையில் மட்டுமே செயல்பட வைத்திருக்கிறது. அதனால்தான் ஊருக்குள் வருவோரை விருந்தினர்களாக கருதி உபசரிக்கும் மக்கள் இப்படி மாறியிருக்கின் றனர். இதற்கு அவர்களை மட்டுமே குறை கூற முடியாது.

தமிழக அரசும், காவல்துறையும் கூடுதல் விழிப்புணர்வுடன் செயல்பட்டிருந்தால் இத்தகைய நிகழ்வுகளை தடுத்திருக்க முடியும். குழந்தைகளை கடத்த வடமாநில கும்பல் வந்திருக்கிறது என்பது வதந்தி என்று செய்திக்குறிப்பு வெளியிட்டதுடன் காவல்துறை அதன் கடமையை முடித்துக் கொண்டது. வடமாவட்ட மக்கள் அனைவரின் வீடுகளுக்கும் சமூக ஊடகங்கள் மூலம் வௌ¢ளமென வதந்திகள் பாய்ந்த வேகத்தில் காவல்துறையின் செய்திக்குறிப்பு எடுபடாமல் போய்விட்டது. அப்பாவிகள் சிலர் தாக்கப்பட்ட போதே, உள்ளூர் காவல்நிலையங்கள் மூலம் அந் தந்த பகுதிகளில் ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியிருந்தால் மக்க ளிடம் நிலவிய அச்சமும், பதற்றமும் விலகியிருக்கும். கொடூர தாக்குதல்களும், உயிரிழப்புகளும் தடுக்கப்பட்டிருக்கும். அந்த வகையில் வடமாவட்டங்களில் நடை பெற்ற தாக்குதல்களுக்கு காவல்துறையும் பொறுப்பேற்க வேண்டும். இனியாவது அரசும், காவல்துறையும் விழித்துக் கொண்டு வதந்திகள் குறித்த மக்களின் அச் சத்தைப் போக்கி, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சமூக ஊடகங்களை பயன்படுத்துவோரும்  தங்களின் சமூகக் கடமைகளை உணர்ந்து பொது அமைதி யை குலைக்கும் எந்த செய்தியையும் பகிரக் கூடாது. தாக்குதலில் உயிரிழந்தவர் களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடும், காயமடைந்தவர் களுக்கு உலகத்தர சிகிச்சையையும் அரசு வழங்க வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages