கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்காத சர்க்கரை ஆலைகளை அரசுடமையாக்க வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஆலைகள் கணக்கில் உள்ள லாபத்தை விவசாயிகளுக்கு பிரித்து வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள 24 சர்க்கரை ஆலைகளும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ஆயிரத்து 347 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை தர முடியாது என கைவிரித்து விட்ட தாக அமைச்சர் துரைக்கண்ணு கூறியிருப்பது அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளார். பினாமி அரசு மது விற்பனை, மணல் கொள்ளை தவிர வேறு எதற்கும் லாயக்கற் றது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்றும் அவர் சாடியுள்ளார்.
தமிழகத்தில் விவசாயிகள் வழங்கிய கரும்புக்கு தனியார் மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் மொத்தம் ஆயிரத்து 583 கோடி ரூபாய் நிலுவைத் தொகை வைத்துள்ளன. இதனை வசூலித்து தருவதாக கடந்த இரு ஆண்டுகளாக அரசு கூறி வரும்போதிலும், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த விவகாரத்தில் அரசின் தோல்வியை அமைச்சர் துரைக்கண்ணு வெளிப்படையாக அறிவித்திருக் கிறார். விவசாயிகளுக்கு நியாயமாக வழங்கப்பட வேண்டிய தொகையை கேட்டு பத்து முறை அமைச்சர்கள் பேச்சு நடத்தியும், அதை சர்க்கரை ஆலைகள் ஏற்க மறுத்தால் அதைவிட பெரிய அவமானம் எதுவும் அரசுக்கு இல்லை. விவசாயி களை ஏமாற்றுவது மட்டுமின்றி, அரசுக்கும் கட்டுப்பட மறுக்கும் சர்க்கரை ஆலை கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்திருக்க வேண் டும். ஆனால் அதை செய்யும் துணிச்சல் ஆட்சியாளர்களுக்கு இல்லை. தஞ்சை, கடலூர் மாவட்டங்களில் உள்ள இரு தனியார் சர்க்கரை ஆலைகளின் கிடங்கு களை அரசு மூடி முத்திரையிட்டிருப்பதால், உழவர்களுக்கு எந்த பயனும் இல்லை. தஞ்சை மாவட்டம் திருமண்டங்குடியில் செயல்பட்டு வரும் திருஆரூரான் சர்க் கரை ஆலை விவசாயிகளுக்கு 30 கோடியே 76 லட்சம் ரூபாய் நிலுவை வைத்துள் ளது. அந்த ஆலைக்கு சொந்தமான கிடங்கில் பல்லாயிரம் டன் சர்க்கரை இருப்பு வைக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆலை மூடி முத்திரையிடப்பட்டுள்ள செய்தி ஆட் சியாளர்கள் தரப்பிலிருந்து கசியவிடப்பட்டதால் பெரும்பாலான மூட்டைகள் அப் புறப்படுத்தப்பட்டு விட்டன. இதனால் கிடங்கு முத்திரையிடப்பட்டபோது, அதில் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள சர்க்கரை மட்டுமே இருந்தது. இது ஆலை வழங்க வேண்டிய நிலுவைத் தொகையில் 13 விழுக்காடு மட்டுமே. அதேபோல, கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் உள்ள அம்பிகா சர்க்கரை ஆலை 60 கோடி ரூபாய் நிலுவைத்தொகை வைத்துள்ள நிலையில், 25 கோடி மதிப்புள்ள சர்க்கரை மட்டுமே கைப்பற்றப்பட்டுள்ளது. சர்க்கரை ஆலைகள் நட்டத்தில் இயங்குகின்றன என்ற பொய்யை உண்மையாக்கி, ஆலை நிர்வாகங்கள் வழங்க வேண்டிய நிலு வைத் தொகையை தராமல் இருப்பதற்காகவே இத்தகைய நாடங்களை தமிழக ஆட்சியாளர்கள் அரங்கேற்றுகின்றனர். தனியார் சர்க்கரை ஆலைகள் கரும்பில் இருந்து மின்சாரம், உரம், காகிதம், எத்தனால் போன்ற பொருட்களை தயாரித் தாலும், அதன்மூலம் கிடைக்கும் வருவாயை பதுக்கிக்கொண்டு, சர்க்கரை விற் பனை பணத்தை மட்டும் வரவு வைத்து நட்டக் கணக்கு காட்டுகின்றன. இந்த மோசடி அனைத்தும் அரசுக்கு தெரியும் என்றாலும், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்தும் கிடைத்து விடுவதால் கண்டுகொள்வதில்லை. தமிழக அரசுக்கு உண்மையாகவே உழவர்கள் மீது அக்கறை இருந்தால், சர்க்கரை ஆலைகளை அரசுடமையாக்கி பொறுப்பான அதிகாரிகளை நியமித்து இயக்க வேண்டும். ஆலைகள் கணக்கில் உள்ள லாபத்தில் உழவர்களுக்கு நிலுவைத் தொகை வழங்க வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment