இனி எந்த காலத்திலும் திமுகவுடன் கூட்டணி கிடையாது என பாமக துணைத் தலைவர் பொங்கலூர் மணிகண்டன் இன்று வெளியிட்டுயுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுயுள்ளது.
பாமக ஆட்சிக்கு வராமலேயே பல சாதனைகளை செய்து தமிழக மக்களுக்கு தொண்டாற்றி வருகிறது.
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் அரசியல் தீர்க்கதரிசி.என தெரிவித்தார். மக்களே திமுக - அதிமுகவை வெறுத்து ஒதுக்கி மாற்றம் வேண்டும் என்று எண்ணுகிற இந்த நேரத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் திசை நோக்கி அனைத்து தரப்பு மக்களும் திரும்புகிற சூழலில் அதை தடுக்க அரசியல் சதியை சிலர் பின்ன தொடங்கி விட்டார்கள்.
டாக்டர் அன்புமணி அவர்களே முதல்வர் வேட்பாளர் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் அறிவித்த பிறகு தனித்துப் போட்டியிட்ட பாமக 6% வாக்குகளைப் பெற்றும், 64 தொகுதிகளில் திமுகவைத் தோற்கடித்தும், பல தொகுதிகளில் சில வாக்கு விகிதத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தும், பல தொகுதிகளில் திமுகவை மூன்றாம் இடத்துக்கு தள்ளியும் தமிழகத்தில் மூன்றாவது மிகப் பெரிய கட்சியாக உருவெடுத்தது என குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவர் அன்புமணி மீதான நம்பிக்கையில் தற்போது தகுதி வாய்ந்த ஒரே இளம் தலைவர் என்று மக்கள் கருதும் நேரத்தில் 100 தொகுதிகளில் தொகுதிக்கு 60 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை பாமக அடிப்படை உறுப்பினர்களை சேர்த்து கட்சியைப் பலப்படுத்தி எதிர்வரும் எந்த ஒரு தேர்தலையும் சந்திக்கவும், வெற்றி பெறவும் தயார் நிலையில் உள்ள பாமகவை பலவீனப்படுத்த திமுகவுடன் கூட்டணி என்ற செய்தியை, வதந்தியைப் பரப்புவதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
பலவீனமான நேரங்களின் போது திமுக - அதிமுக இரண்டு கட்சிகளும் பாமகவைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்ததையும், தங்களின் வாக்கு வங்கியின் சரிவை சமன் செய்து கொண்டதையும் மக்கள் அறிவர். கடந்த காலத்தில் திமுக - அதிமுகவோடு கூட்டணி அமைத்தமைக்கு பாமக மக்களிடம் பகிரங்கமான மன்னிப்பை கேட்டு இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
எனவே திமுகவோடு கூட்டணி என்ற செய்தியை மறுக்கிறோம்.
பாமகவை திட்டமிட்டு குழப்ப யாரோ செய்கின்ற சதி என்பதை உணர்ந்து சமூக பாமகவினர் வதந்திகளுக்குள் நமது கவனத்தை செலுத்த வேண்டாம் என்று அன்போடு வேண்டுகிறேன் என இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment