திண்டிவனத்தில் சரஸ்வதி சட்டக்கல்லூரி திறக்க உச்சநீதி மன்றம் அனுமதி!!!. - Agnipuratchi

திண்டிவனத்தில் சரஸ்வதி சட்டக்கல்லூரி திறக்க உச்சநீதி மன்றம் அனுமதி!!!.

Share This

2007 ஆம் ஆண்டு வன்னியர் அறக்கட்டளையில் சரஸ்வதி சட்டக் கல்லூரி என்ற பெயரில் சட்டக் கல்லூரி துவங்குவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது....

அதனை தொடர்ந்து 25.09.2007 அன்று தடை இல்லா சான்று பெருவதற்காக தமிழக அரசிடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டது.
ஆனால்,தடை இல்லா சான்று வழங்க அரசு மறுத்து விட்டது.

இதனை தொடர்ந்து வன்னியர் அறக்கட்டளையின் சார்பில் 2008ஆம் ஆண்டு வழக்கறிஞர் கே.பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்,வாதியின் மனுவை பரிசீலனை செய்து தடை இல்லா சான்று வழங்கும் படி அரசிற்கு உயர் நீதிமன்றம் ஆனை பிறப்பித்து..

ஆனால், தமிழக அரசு அந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு சென்றது, தமிழக அரசு தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது.

ஆணையிடக் கோரியும் வன்னியர் கல்வி அறக்கட்டளை உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,தமிழக அரசின் சட்டம் செல்லாது என்று 26.10.2016அன்று தீர்ப்பு வழங்கியதுடன்,தீர்ப்பு நகல் கிடைத்த 4வாரங்களில் அனுமதியளிக்க வேண்டும் என்றும் ஆணையிட்டது.

அதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி அருண்மிஸ்ரா தலைமையிலான அமர்வு,சரசுவதி சட்டக்கல்லூரியில் போதுமான கட்டமைப்புகள் உள்ளனவா? என்பதை ஆய்வு செய்து இணைப்பு வசதி வழங்கும்படி கடந்த மார்ச் மாதம் ஆணையிட்டது. அதைத்தொடர்ந்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சட்ட வல்லுனர்கள் மற்றும் பேராசிரியர்கள் அடங்கிய குழு ஆய்வு செய்து, சரசுவதி சட்டக்கல்லூரியில் வியக்கத்தக்க வகையில் கட்டமைப்பு வசதிகள் இருப்பதாக சான்றளித்ததால்,அக்கல்லூரிக்கு இணைப்பு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதை உச்சநீதிமன்றமும்  ஏற்றுக் கொண்டிருக்கிறது. சரசுவதி சட்டக் கல்லூரிக்கான உட்கட்டமைப்பு வசதிகளிலோ,பேராசிரியர் நியமனங்களிலோ எந்தக் குறையும் இல்லை;அனைத்தும் சிறப்பாக உள்ளதாக ஆய்வுக்குழு சான்றளித்துள்ள நிலையில்,எந்த அடிப்படையில் சரசுவதி சட்டக்கல்லூரிக்கு கடந்த 10ஆண்டுகளுக்கும் மேலாக அனுமதி மறுக்கப்பட்டு வந்தது என்பது குறித்து தமிழக ஆட்சியாளர்கள் கண்டிப்பாக விளக்கமளிக்க வேண்டும்.

இதனையடுத்து பல சட்டப் போராட்டங்களுக்கு பின்னர் 2013ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் ஆனையின் படி தடை இல்லா சான்று வழங்கப்பட்டது....

பின்பு, 2014-2015 ஆம் ஆண்டு கல்வி தொடங்குவதற்காக affiliation வழங்கும் படி தமிழக அரசிடம் விண்ணப்பம் அளிக்கப்பட்டது.

வன்னியர் அறக்கட்டளையின் கீழ் சட்டக் கல்லூரி துவங்க கூடாது என்பதற்காகவே திராவிட கட்சிகள் தனி ஒரு சட்டமே 2014 ஆம் ஆண்டு இயற்றியது.

மேலும், முன்னாள் திமுகவின் சட்டத் துறை அமைச்சர் துறை முருகன், அதிமுகவின் சட்டத் துறை அமைச்சர் G.செந்தமிழன், மற்றும் தற்போதைய அதிமுகவின் சட்டத் துறை அமைச்சர் C.Ve.சண்முகம் ஆகியோர் வன்னியர்களாக இருந்தும், வெவ்வேறு கட்சிகளில் இருந்தாலும் சரஸ்வதி சட்டக் கல்லூரி துவங்க கூடாது என்பதில் ஒரு மனதோடு உறுதியாக இருந்தனர்.

தமிழகத்தில் சட்டப்படிப்பு படிக்க விண்ணப்பம் செய்பவர்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கு இடம் கிடைப்பதில்லை. அவர்கள் ஆந்திரா, கர்நாடகம்,தெலுங்கானா மாநிலங்களுக்கு சென்று தான் சட்டப்படிப்பு படிக்கின்றனர். இதற்குக் காரணம் தமிழகத்தில் போதிய அளவில் சட்டக்கல்லூரிகள் அமைக்கப்படவில்லை என்பது தான்.

 உத்தரப்பிரதேசத்தில் 459 சட்டக் கல்லூரிகளும், மத்தியப் பிரதேசத்தில் 161,மராட்டியத்தில் 140, ராஜஸ்தான் மற்றும் கர்நாடகத்தில் தலா 125கல்லூரிகளும், ஒருங்கிணைந்த ஆந்திரத்தில் 80 சட்டக் கல்லூரிகளும்  உள்ளன. ஆனால், தமிழகத்தில் 10 அரசு சட்டக் கல்லூரிகளும், ஒரு தனியார் கல்லூரியும் மட்டுமே உள்ளன. அதிலும், குறிப்பாக திருவண்ணாமலை, கடலூர்,நாகப்பட்டினம், திருவாரூர்,அரியலூர் போன்ற மாவட்டங்களில் சட்டக்கல்லூரிகள் இல்லாத நிலையில், சரசுவதி சட்டக் கல்லூரி வரப்பிரசாதமாக அமையும். இப்படிப்பட்ட கல்லூரி வராமல் தடுத்ததன் மூலம் அதிமுக, திமுக ஆட்சிகள் பெருந்துரோகம் செய்துள்ளன.அதனை எதிர்த்து வன்னியர் அறக்கட்டளையின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அதிலும், அறக்கட்டளைக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

திராவிட கட்சிகள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளையும் முறியடித்து பதினோரு ஆண்டு போராட்டத்திற்கு பிறகு இன்று (16.05.2018) வன்னியர் அறக்கட்டளை உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் வெற்றி பெற்றுள்ளது.

1 comment:

  1. I would like to apply our collage please help ..my caste MBc

    ReplyDelete

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages