ஜெ.குரு முகநூல் பதிவு - Agnipuratchi

ஜெ.குரு முகநூல் பதிவு

Share This

பா.ம.க. தொண்டர்களால் ‘மாவீரன்’ என்று அன்போடும், பாசத்தோடும் அழைக் கப்பட்ட ஜெ.குரு, பா.ம.க.நிறுவனர் மருத்துவர் ராமதாசை தன்னுடைய தந்தைக் கும் மேலானவர் என்றே எப்போதும் குறிப்பிடுவார். கடந்த மார்ச் மாதம் உடல்நலம் குன்றியிருந்த போதும் தன்னுடைய முகநூலிலும் அதைப் பதிவு செய்திருந்தார். ‘தன்னை பெற்ற தந்தை இப்போது இல்லை என்றாலும், தன்னுடைய தந்தையாக  மாமனிதர் மருத்துவர் அய்யா இருக்கிறார்’ என்று ஜெ.குரு தனது முகநூலில் குறிப்பிட்டுள்ளார். 

வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குருவைப் பற்றி கூறும்¢ போதெல்லாம், அவர் தனது மூத்த பிள்ளையைப் போன்றவர் என்றே பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராம தாஸ் குறிப்பிடுவார். ஜெ.குருவும், மருத்துவர் ராமதாசை தனது தந்தைக்கும் மேலாக மதிப்பதாகவே கூறுவார்.‘மருத்துவர் அய்யாவை சந்தித்திருக்கா விட்டால் தன்னுடைய வாழ்க்கைப்பாதை சீர்பட்டிருக்காது என்று கூறும் ஜெ.குரு, அதை ஒரு நேர்காணலிலும் பதிவு செய்திருந்தார். 

உடல்நலம் குன்றியிருந்த நிலையிலும் கடந்த மார்ச் மாதம் தன்னுடைய முகநூலில் மருத்துவர் ராமதாஸ் அவர்களைப் பற்றி ஜெ.குரு மிகவும் பெருமிதத்தோடு குறிப் பிட்டிருந்தார்.‘எப்போதும் என்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிற மாமனிதர் மருத்துவர் அய்யா அவர்கள்" உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து என்னை அய்யா அவர்களும், சின்ன அய்யா அவர்களும் ஒரு முறை அல்ல, ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை வந்து பார்த்து உடல் நலம் பற்றி விசாரித்து வருகிறார்கள்..

அவர்கள் இருவருக்கும் என்னை வெளிநாட்டிற்கு அழைத்து சென்று சிகிச்சை செய்ய வேண்டுமென்றுதான் விருப்பம்..ஆனால்,வெளிநாடு செல்லும் அளவுக்கு என் உடல்நிலை இல்லை. ஆகவே இங்குள்ள சிறந்த மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று தற்போது உடல்நலம் பெற்று வருகிறேன். இதுவரை நடைபெற்ற மருத்துவ செலவுகள் அனைத்தையும் மருத்துவர் அய்யா மற்றும் சின்ன அய்யா அவர் கள்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். 

என்னை பெற்ற தந்தை இப்போது இல்லை என்றாலும், என்னுடைய தந்தையாக 
மாமனிதர் மருத்துவர் அய்யா இருக்கிறார் என்பதை எண்ணும்போது என் உடல் நலம் விரைவில் நலம் பெறும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை’ என்பதுதான் ஜெ.குருவின் கடைசி முகநூல் பதிவு.   

புத்தகங்கள் படிப்பதில் அதிக ஆர்வம் மிகுந்த ஜெ.குரு, தன்னுடைய மகிழுந்தில் எப்போதும் நிறைய நூல்களை வைத்திருப்பார். பயண நேரங்களை பெரும்பாலும் அவற்றைப் படிப்பதிலேயே செலவிடுவார். தான் பிறந்த ஊரான காடுவெட்டி கிரா மத்தின் மீது அளவில்லா பற்றும் பாசமும் கொண்டவர். அதனாலேயே அவருடைய பெயருடன் பிறந்த மண்ணின் பெயரையும் சேர்த்து காடுவெட்டி குரு என்று தொண்டர்கள் அழைக்கத்தொடங்கினர். 

வன்னியர்களுக்கு 20 விழுக்காடு தனி இட ஒதுக்கீட்டுக்காக வாழ்நாள் முழு வதும் குரல் கொடுத்தவர் ஜெ.குரு. தான் சார்ந்த சமூகத்திற்காக மட்டுமல்லாமல்  அனைத்து சமூகத்தினருக்கும் மக்கள் தொகை அடிப்படையில இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். 

இட ஒதுக்கீட்டுக்காக எப்போதும் முதல் குரல் கொடுக்கும் சமூக நீதிக் காவலர் மருத்துவர் ராமதாசிடம் இருந்து தன்னை பிரிக்க வேண்டும் என்றால், அது மரணமாக மட்டும்தான் இருக்கும் என்று கூறுவார் ஜெ.குரு.. 

அவர் கூறியது இப்போது உண்மையாகிவிட்டது. காலச்சிறையெடுப்பின் கட்ட ளைக்குள் அடங்காது 57 ஆண்டுகளாக முடிவற்று ஓடிய ஒரு சமூகத்தின் வீரத் திருநதி, வரலாற்றுப் பெருநதியில் கலந்திருக்கிறது. தன் சமூகத்திற்காக வாழ்நாளெல்லாம் உழைத்த அந்த திருமகனுக்கு வீர வணக்கம்! 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages