சட்டப்பேரவை கட்சித் தலைவரை தேர்வு செய்வதற்காக பா.ஜ.கவும், காங்கிரஸ் கட்சியும், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தை இன்று கூட்டியுள்ளதால், ஆட்சியமைப்பதில் நிலவும் போட்டி வேகமெடுத்துள்ளது. - Agnipuratchi

சட்டப்பேரவை கட்சித் தலைவரை தேர்வு செய்வதற்காக பா.ஜ.கவும், காங்கிரஸ் கட்சியும், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தை இன்று கூட்டியுள்ளதால், ஆட்சியமைப்பதில் நிலவும் போட்டி வேகமெடுத்துள்ளது.

Share This

சட்டப்பேரவை கட்சித் தலைவரை தேர்வு செய்வதற்காக பா.ஜ.கவும், காங்கிரஸ் கட்சியும், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தை இன்று கூட்டியுள்ளதால், ஆட்சியமைப்பதில் நிலவும் போட்டி வேகமெடுத்துள்ளது.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையம் அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. அதில் பா.ஜ.க 103 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. 3 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் தேவகவுடா ஆலோசனை நடத்தினார். இதேபோல டெல்லியில் பா.ஜ.க மூத்த தலைவர்களுடன் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் ஆலோசனையில் ஈடுபட்டனர். இரண்டு கட்சிகளும் இன்று சட்டப்பேரவை கட்சித் தலைவரை தேர்வு செய்வதற்காக வெற்றிபெற்ற உறுப்பினர்களின் கூட்டத்தை கூட்டியுள்ளது. நிலையான ஆட்சி அமைப்பதற்கு வசதியாக காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணியை ஆளுநர் அழைக்க வேண்டும் என்று, குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் அதிக இடங்களில் எந்தக்கட்சி வெற்றி பெற்றிருந்தாலும், ஆட்சி அமைக்க போதுமான சட்டப்பேரவை உறுப்பினர்களைக் கொண்ட கூட்டணியை தான் அழைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் வரையறுத்துள்ளது. இதே நடைமுறைதான் மேகாலயா மற்றும் கோவாவில் கடைபிடிக்கப்பட்டது. அதனால் தங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என மதச்சார்பற்ற ஜனதா தளம் தெரிவித்துள்ளது. கோவா தேர்தலின் போது அருண்ஜேட்லி, இதை முன்மொழிந் ததை நினைவுகூறி சமூக வலைதளங்களில் ஏராளமானோர் பதிவிட்டுள்ளனர்.  இழுபறி நீடித்தாலும் காங்கிரஸ் கூட்டணியுடன் மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆட்சியமைப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages