தி நகர் , பாண்டிபஜார் உள்ளிட்ட பகுதிகளில் குறிப்பாக ரங்கநாதன் தெரு , நடேசன் சாலை , உஸ்மான் சாலை , வெங்கட்நாரயனா சாலை , சவுந்திரபாண்டியனார் அங்காடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலை மற்றும் நடைபாதைகளை ஆக்கிரமிப்பு செய்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன !
பல முறை புகார் கொடுத்தும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது இல்லை !
சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான சாலை மற்றும் நடைபாதை களை ஐம்பதாயிரம் முதல் ஐந்து லட்சம் வரை விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்யப்படுகிறது !
இதற்கு மாநகராட்சி அதிகாரிகள் முதல் ஒரு சில காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளும் கட்சியினர் இணைந்து இந்த கூட்டுக்கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர் !
தவறாமல் மாமூல் வசூக்கும் பணி நடைபெற்று வருகிறது !
உடனடியாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களை மீட்டு பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நடைபாதை அமைத்து தர வேண்டும் என தென் சென்னை மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இன்று 136 வார்டு மாநகராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டு உள்ளது !
அடுத்த 15 நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் சென்னை மாநகராட்சி மண்டலம் 10 ல் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக கோரிக்கை நிறைவேறும் வரை உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும் !
*இவண் : தென் சென்னை மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி*
No comments:
Post a Comment