மருத்துவர் ராமதாஸ் சொன்ன மாதிரியே நடந்து விட்டது.
கர்நாடக தேர்தலுக்குப் பிறகு உயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை!
பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாற்றி அமைத்து வந்தன. ஆனால் கடந்த மாதம் 24-ந் தேதி முதல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது.
இதுபற்றி தன் ட்விட்டரில் கருத்து தெருவித்து ராமதாசு அவர்கள்
ஒரு பொதுநல அறிவிப்பு. இன்று மாலை கர்நாடகத் தேர்தல் முடிவடைந்து விடும். கடந்த 3 வாரமாக உயர்த்தப்படாத பெட்ரோல், டீசல் விலைகள் நாளை காலை மொத்தமாக உயர்த்தப்படலாம். விலை உயர்விலிருந்து தப்ப இன்றே எரிபொருளை நிரப்பிக் கொள்ளுங்கள்!என தெரிவித்து இருந்தார்.
அதுமட்டும் இல்லாமல் பெட்ரோல் விலை லிட்டருக்கு 18 காசு, டீசல் விலை 23 காசு உயர்வு: செய்தி - இப்ப தானே கர்நாடக தேர்தல் முடிந்திருக்கிறது. இது ஆரம்பம் தான். போகப்போக பாருங்கள் சீக்கிரமே செஞ்சுரி அடித்து விடுவார்கள்.என தெரிவித்து இருந்தார்.
அவர் சொன்ன மாதிரியே நடந்து விட்டது என இணையதள வாசிகள் பேசி கொள்கிறார்கள்
No comments:
Post a Comment