திண்டிவனத்தில் அமையவுள்ள சரஸ்வதி சட்டக்கல்லூரி, உலகத்தரம் வாய்ந்த தாக இருக்கும் என வழக்குரைஞர் சமூகநீதி பேரவைத் தலைவர் கே.பாலு தெரிவித்துள்ளார்.
திண்டிவனத்தை அடுத்த ஒலக்கூரில் அமையவுள்ள சரஸ்வதி சட்டக்கல்லூரிக்கு உச்சநீதிமன்ற ஆணைப்படி அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் இணைப்பு அனு மதி வழங்கியது. அதற்கு உச்சநீதிமன்றம் நேற்று ஒப்புதல் வழங்கியது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் வழக்குரைஞர் சமூகநீதி பேரவை நிர்வாகி கள் இன்று பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாசை நேரில் சந்தித்து இனிப்பு வழங்கி வாழ்த்து பெற்றனர். சென்னை தியாகராயநகரில் உள்ள அன்புமணி ராமதாசின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்புக்கு பிறகு செய்தி யாளர்களிடம் பேசிய வழக்குரைஞர் சமூகநீதி பேரவையின் தலைவர் கே.பாலு, சரஸ்வதி சட்டக்கல்லூரி, உலகத்தரம் வாய்ந்ததாக இருக்கும் எனத் தெரி வித்தார்.
வழக்குரைஞர் சமூகநீதி பேரவை நிர்வாகிகள் ஜோதிமணி, குமார், சசிக்குமார், கோபி, இளவரசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்
No comments:
Post a Comment