சேலம் - சென்னை பசுமைவழித்தட விரைவுச்சாலை அமைக்க கூடாது என மருத்துவர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
சேலம் - சென்னை பசுமைவழித்தட விரைவுச்சாலை அமைக்க முக்கியத்துவம் அளிக்கப்படுவதற்கு காரணம் சிலரின் சுயநலனும், சுய இலாபமும் தான் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள மலைகளில் குவிந்து கிடக்கும் இரும்புத் தாதுவை ஜிண்டால் குழுமம் வெட்டி எடுக்கவுள்ளது. அந்த நிறுவனத்தின் வசதிக்காகவே சேலத்தில் இருந்து திருவண்ணாமலை வழியாக சென்னைக்கு சாலை அமைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கு துணையாக இருப்பதற்காக பினாமி ஆட்சியாளர்களுக்கு பெருமளவில் பொருளாதார பயன்கிடைக்கும். அதனால் தான் முக்கியமான சாலையை விரிவாக்கும் பணியை கைவிட்டு, மக்களுக்கு பயனில்லாத சென்னை - சேலம் செயல்படுத்தும்படி மத்திய அரசுக்கு பினாமி அரசு பரிந்துரைத்துள்ளது. இதை மன்னிக்க முடியாது. அதுமட்டுமின்றி, சேலம் - சென்னை விரைவுச்சாலைக்காக பல ஊர்களில் உழவர்களுக்கு சொந்தமான பல்லாயிரம் ஏக்கர் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. தனியார் நிறுவன நலனுக்காக ஒட்டுமொத்த தமிழகத்தின் நலன்களையும் காவு கொடுக்கக்கூடாது என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment