வேளாண்மை ஒருங்கிணைந்த பசுமைப் புரட்சி தொடர் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் மத்திய பொருளாதார விவகாரத் துறைக்கான அமைச்சரவைக் குழுவின் கூட்டம் (மே 2, 2018)அன்று நடைபெற்றபொழுது வேளாண்மையின் பல்வேறு திட்டங்களை ஒரு குடைக்கீழ் கொண்டு வரும் வகையில் திட்டமிடப்படும்.
“பசுமைப் புரட்சி – கிரிஷோணத்தி யோஜனா” என்ற திட்டத்திற்கு அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இத்திட்டம் 2017-18ம் ஆண்டு முதல் 2019-2020ம் ஆண்டு வரையிலான 12ஆவது ஐந்தாண்டு திட்ட காலத்தையும் கடந்து செயல்படுத்துவது என முடிவெடுக்கப்பட்டது. இதற்கான மத்திய நிதி ஒதுக்கீட்டுப் பங்கு ரூ. 3,32,69.976 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் 11 திட்டங்களும் இயக்கங்களும் இடம்பெற்றுள்ளன. இது வேளாண்மை மற்றும் அது தொடர்பான பல்வேறு திட்டங்களை ஒட்டுமொத்தமாகவும் அறிவியல் அடிப்படையிலும் செயல்படுத்துவதற்கானது ஆகும். மேலும், விவசாய உற்பத்திப் பொருட்களை அதிகரித்து, அதன் பலனாக விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க உதவும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இந்த ஒட்டுமொத்த திட்டங்களைச் செயல்படுத்த 2017-18, 2018-19 மற்றும் 2019-2020 ஆகியமூன்று ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ. 3,32,69.976 கோடிசெலவாகலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த திட்டங்களின் கீழ் இடம்பெறும்.
மத்திய அரசு திட்டங்கள்:
ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டு இயக்கம் (MIDH)
தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கம் (NFSM),
நீடித்த வேளாண்மைக்கான தேசிய இயக்கம் (NMSA)
வேளாண் விரிவாக்கத்துக்கான துணை இயக்கம் (SMAE)
விதைகள், தாவரப் பொருட்கள் குறித்த துணை இயக்கம் (SMSP)
வேளாண் இயந்திரமயமாக்கல் குறித்த துணை இயக்கம் (SMAM)
தாவரப் பாதுகாப்பு மற்றும் தடுப்புக் காப்புத் திட்டம்(SMPPQ)
வேளாண் புள்ளிவிவரம், பொருளியல் விவரம் குறித்த ஒருங்கிணைந்த திட்டம் (ISACES)
வேளாண் ஒத்துழைப்புக்கான ஒருங்கிணைந்த திட்டம் (ISAC)
வேளாண் சந்தைமயமாக்கல் ஒருங்கிணைந்த திட்டம் (ISAM)
தேசிய மின்-ஆளுகைத் திட்டம் (NeGP-A) போன்ற பல்வேறு திட்டங்களைஅரசு சசெயல்படுத்தவுள்ளது நம் நாட்டின் பல்வேறு நிலைகளில் மாறுபாடும் உள்ளது கிராமப்புற விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி இத்திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக செயல்படும்பொழுது இந்தியா வேளாண்துறையில் வளர்ச்சி அடையும் இதற்கு முக்கிய பிரச்சனையாக உள்ள நீர் குறித்த பிரச்சனைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் நாட்டில் ஊடகவளர்ச்சியின் காரணமாக அரசியல் சார்ந்த பிரச்சனைகளுக்கும் அரசியல்வாதிகளின் இல்லநிகழ்ச்சிகளுக்கும் முக்கியத்துவம் அளித்து செயல்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்பது அனைவராலும் கருத்தாக வெளிப்படுகிறது.
கர்மவீரர் காமராஜர் நீர்வளர்ச்சித்திட்டங்களுக்கு அதிகமுக்கியத்துவம் அளித்துள்ளார் அதன்காரணமாக பல நேரங்களில் சமூகப்பிரச்சனைகள் தீர்க்கப்பட்டது உண்மையாகும் இன்று நிலைமை தலைகீழ் திட்டங்கள் சிதறடிக்கப்பட்டு தனிநபர் பிரச்சனை, ஊழல் காரணமாகவும் துறைகள் அனைத்திலும் கமிஷன் பிரச்சனையாக மாறியுள்ளது அனைத்து மாநிலங்களிலும் ஆட்சியாளர்கள் ஆட்சி முடிவடைந்தவுடன் அதிகமான ஊழல்,பினாமி சொத்துக்களை முடக்க ஆணையம் ஒன்று ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் அமைக்கவேண்டும் திடீர்போராட்டங்கள் எழுச்சி அடைந்தபோதிலும் ஆட்சி என்ற மாற்றத்தால் பதவிபிரச்சனையால் விவசாயம் பாழ்பட்டுள்ளது காவிரிபிரச்சனை,மீத்தேன் திட்ட பிரச்சனை மெழுகுவர்த்தியாக அணைந்துள்ளது முக்கிய பிரச்சனையாக பலிவாங்கிய தூதூத்துக்குடி கலவர பிரச்சனையாக மாறிவிட்டது மக்கள் உண்மை நிலை அறியும் வரை எதிர்கால விவசாயம் கேள்விக்குறியாகிவிடுமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது. நீர்வளம் சிறக்கவும் விவசாயத்திற்கு முன்னுரிமை அளித்தால் மட்டுமே பசியின்கொடுமை ஏற்படாமல் எதிர்கால சந்ததிகளை உருவாக்க இயலும் இல்லையென்றால் ஊழல்வாதிகளின் தலைமுறை சமூகத்தை சீரழித்து பெட்ரோல் விலையேற்றம் அதிகரிப்பதைப்போன்று சமூகத்தில் பிரச்சனை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக சமூகசெயற்பாட்டாளர்கள் கருத்துத்தெரிவித்துள்ளார்கள்.
No comments:
Post a Comment