ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பது ஊழலுக்கு மணிமகுடம் சூட்டுவதற்கு சமம் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் சாடியுள்ளார். - Agnipuratchi

ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பது ஊழலுக்கு மணிமகுடம் சூட்டுவதற்கு சமம் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் சாடியுள்ளார்.

Share This

ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பது ஊழலுக்கு மணிமகுடம் சூட்டுவதற்கு சமம் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் சாடியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு பீனிக்ஸ் பறவை வடிவத்தில் நினைவிடம் அமைக்க இன்று அடிக்கல் நாட்டப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விழா வுக்காக பிரம்மாண்ட முறையில், யாக சாலைகள் அமைக்கப்பட்டு வேள்விகள் நடத்தப்பட்ட நிகழ்வுகளை  மருத்துவர் ராமதாஸ் சாடியுள்ளார். வேள்விகள் நடத் தினாலும், பட்டுத்துணிகளைப் போட்டு மூடிவைத்தாலும் ஜெயலலிதாவின் ஊழல் களை மறைக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.நினைவிடத்தில் அருங் காட்சியகம் அமைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளதை குறிப்பிட்டுள்ள மருத்துவர் ராமதாஸ், ஜெயலலிதாவின் எந்தெந்த சாதனைகளை பார்வைக்கு வைக்கப்படும் என்பதுதான் தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.ஊழல் வழக்கில் இருமுறை தண்டிக்கப்பட்டவர். இருமுறை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர். ஊழலில் தண்டிக்கப்பட்டதால் சட்டப்பேரவை உறுப்பினர் தகுதி யை இழந்தவர். ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதால் கலவரத்தை தூண்டிவிட்டு 3 அப்பாவி மாணவிகளை எரிக்க வைத்தவர் ஆகியவைதான் ஜெயலலிதாவின் அளப்பரிய சாதனைகளில் முதன்மையாக அமையும் என மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார். 

ஜெயலலிதா இப்போது உயிருடன் இருந்திருந்தால் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவுடன் அடைக்கப்பட்டிருப்பார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இப்படிப்பட்டவருக்கு 50 கோடி ரூபாய் செலவில் நினைவிடம் அமைத்தால் அதை ஊழல் சின்னமாகவே பொதுமக்கள் பார்ப்பார்கள் எனவும் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் நினைவிடத்தை நேரடியாக பார்த்தால் பீனிக்ஸ் பறவை போன்றும் கழுகுப் பார்வையில் பார்த்தால் இரட்டை இலை போலவும் தோன்றும் எனவும் அவர் கூறியுள்ளார்.எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் இரட்டை இலை சின்னம் வடிவில் நுழைவாயில் அமைக்கப்பட்டதில் சர்ச்சை எழுந் ததை மருத்துவர் ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார். அப்போது குதிரை றெக்கை யின் நிழல் என்று விஞ்ஞான முறையில் விளக்கம் அளித்து தமிழக அரசு தப் பித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா நினைவிடத்திலும் மக்கள் வரிப்பணத்தில் இரட்டை இலை சின்னம் அமைத்து ஆளுங்கட்சிக்கு ஆதரவாக பரப்புரை செய்வதை அனுமதிக்க முடியாது எனவும் மருத்துவர் ராமதஸ் கூறி யுள்ளார். காவிரிப் பிரச்சனை, நீட்தேர்வு சிக்கல், குடிநீர்ப்போராட்டம் போன்ற  தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள் ஏராளமாக உள்ள  நிலையில், ஜெயலலிதா வுக்கு அவசர அவசரமாக நினைவிடம் அமைப்பதை அனுமதிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். முதலமைச்சராக பதவி வகித்திருந்தாலும்  ஊழல் செய்ததற்காக தண்டனை பெற்றவருக்கு நினைவிடம் அமைக்க எந்த சட்டமும் நீதிமன்றமும் அனுமதிப்பதில்லை என மருத்துவர் ராமதாஸ் விளக்கியுள்ளார். சட்டப்பேரவை மாடத்தில் ஜெயலலிதா படம் திறக்கப்பட்ட விவகாரத்தில் பேரவைத் தலைவரின் முடிவில் தலையிட விரும்பவில்லை என்றுதான் உயர்நீதிமன்றம் கூறி யதே தவிர, ஆதரிப்பதாக தெரிவிக்கவில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தி யுள்ளார்.  எனவே மக்களின் வரிப்பணத்தில் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் கட்டும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் வலியு றுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages