போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்த வழக்கில் விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர் உள்பட 11 பேர் கைது - Agnipuratchi

போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்த வழக்கில் விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர் உள்பட 11 பேர் கைது

Share This

போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்த வழக்கில் 2016 தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிட்டவர் உள்பட 11 பேர் கொண்ட கும்பலை கைது செய்த காவல்துறையினர், 100க்கும் மேற்பட்ட போலி பாஸ்போர்ட்களை பறிமுதல் செய்துள்ளனர். 

போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு செல்ல முயற்சிக்கும் நபர்களை பிடித்து விசாரித்த போது, அவர்களுக்கு ஒரு கும்பல் போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்து வருவது தெரியவந்தது. இதையடுத்து அந்த கும்பலைப் பிடிக்க மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் சிறப்பு குழு அமைக்கப்பட்டு, ஒரு மாதம் தீவிரமாக தேடி வந்தனர். இது தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த இடைத்தரகர் கிருஷ்ணமூர்த்தி என்பவரையும் கண்காணித்து வந்தனர்.

இதன் அடிப்படையில் போலி பாஸ்போர்ட் தயாரித்த கும்பல் சிக்கியுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் 2016 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட வீரகுமார், சுரேஷ், சரவணன், பாலாஜி உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த கும்பலிடம் இருந்து 100க்கும் மேற்பட்ட போலி பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இலங்கை அகதிகள் போன்று போலியான முகவரியிலும், வேறு நாட்டுக்கு சென்று வந்தது போல் வெளிநாடுகளின் சீல் வைத்தும் பாஸ்போர்ட் தயாரித்து வழங்கி இருக்கின்றனர். ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்கும் இந்த கும்பல் போலி பாஸ்பார்ட் தயாரித்து கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட 11 பேரும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். எத்தனை பேருக்கு போலி பாஸ்போர்ட் தயாரித்துள்ளனர், வேறு யாருக்கும் இதில் தொடர்புள்ளதாக என்பது குறித்து காவல்துறையின்ர் விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages