காவிரியின் குறுக்கே மிகப்பெரிய அணைகளை கர்நாடகம் கட்டியதுதான் நீர் பங்கீட்டு சிக்கலுக்குக் காரணம் என நடுவண் நீர்வள மேம்பாட்டு ஆணைய ஆலோசகர் ராஜேந்திரசிங் தெரிவித்தார்.
‘வைகையை மீட்போம்’ என்ற தலைப்பில் மதுரையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக வந்த ராஜேந்திரசிங், மதுரை வானூர்தி நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தமிழகத்தில் மணல் குவாரிகளால் ஆறுகள் அழிக்கப்பட்டதாக அவர் கூறினார். தமிழகத்தின் நீர்வளம் குறைந்ததற்கு மணல் குவாரிகள் மிக முக்கிய காரணம் எனக் கூறிய ராஜேந்திர சிங், ஆறுகளின் குறுக்கே பெரிய அணைகளை கட்டுவதற்கு பதிலாக சிறுசிறு தடுப்பணைகள் கட்டினால் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்றார். காவிரியின் குறுக்கே கர்நாடகம் மிகப்பெரிய அணைகளை கட்டியதே தற்போதைய சிக்கலுக்குக் காரணம் என்றும் ராஜேந்திர சிங் குற்றம்சாட்டினார்.
No comments:
Post a Comment