மெனு ஆன் ரயில்ஸ்' மற்றும் ' ரயில் மதத்' ஆகிய இரண்டு புதிய செயலிகளை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. மோடி அரசின் 4 ஆண்டுகள் நிறைவையொட்டி இவ்விரு செயலிகளை ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் அறிமுகம் செய்தார்.
மெனு ஆன் ரயில்ஸ் செயலி
மெனு ஆன் ரயில்ஸ் என்ற செயலி மூலம் ரயில்களில் வழங்கப்படும் அனைத்து வகையான உணவு விவரங்களை கண்டறியலாம்.(Menu) உணவு தொகுப்பின்கீழ், காலை சிற்றுண்டி, மதிய சிற்றுண்டி, மதிய உணவு, அசைவ உணவு, ஜெயின் உணவு, இனிப்பு வகைகள், சர்க்கரை நோயாளிகளுக்கான உணவு போன்ற 96 வகையான உணவு பொருட்கள் உள்ளன.ரயில்களில் உணவு பொருட்களுக்கு கூடுதல் விலை வசூலிப்பதைத் தடுக்கவும் உணவு பொருட்கள் மற்றும்.விலை பற்றி ரயில் பயணிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இந்த செயலி உதவும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது
ரயில் மதத் செயலி
.
அதேபோல் பயணிகள் குறைதீர்ப்பை துரிதப்படுத்தவும், முறைப்படுத்தவும் ரயில் மதத் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த செயலி மூலம் பயணிகள் புகாரை பதிவு செய்யலாம்.
அதேபோல் புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் பயணிகளுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும்.பாதுகாப்பு, குழந்தைகளுக்கான உதவி உள்ளிட்ட பல்வேறு உதவிக்கான தொலைபேசி எண்களும் இந்த செயலியில் இடம் பெற்றுள்ளன.
மதுரை ரயில் செயலி
பயணிகளில் வசதிக்காக மதுரை ரயில்வே கோட்டம் 'மதுரை ரயில்' என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது.இந்த செயலியின் மூலம் மதுரை ரயில் நிலையத்தில் உள்ள பயணிகளுக்கான வசதிகள் பற்றியும் மற்றும் மதுரை நகரில் உள்ள சுற்றுலா தளங்கள் பற்றியும் அறிந்து கொள்ளலாம். இந்த செயலியின் மூலம் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணசீட்டின் தற்போதைய நிலவரம், ரயில் எங்கே வந்து கொண்டிருக்கிறது போன்ற விவரங்களையும் அறியலாம்.
No comments:
Post a Comment