நாடு முழுவதும் 5 ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய அளவிலான அணைகள் உள்ளன. 450 அணைகள் கட்டப்பட்டு வருகின்றன. அவற்றை பாதுகாப்பதற்காக நடுவணரசு சட்டம் கொண்டுவர உள்ளது. இதற்கு பிரதமர் தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப் பட்டது.
நாட்டில் உள்ள அணைகளை பாதுகாப்பதற்கும் பராமரிப்பதற்கும் ஒரே சீரான நடைமுறையை பின்பற்றுவதற்கு இந்தச்சட்டம் வழிவகுக்கும். அணை பராமரிப்புக்கு மாநில அளவில் குழுக்களை ஏற்படுத்தவும் இச்சட்டம் வழிவகை செய்கிறது. அணைகள் சரியான முறையில் இயங்கும் வகையில் அவற்றை ஆய்வு செய்யவும் கண்காணிக்கவும் சரியான கொள்கைகளை உருவாக்குவதற்கும் புதிய சட்டம் வழிகாட்டும். அணைகளை பராமரிப்பதற்கும் தேவையான கொள்கைகளை உருவாக்குவதற்கும் தேசிய அணை பாதுகாப்புக் குழு அமைக்கப்படும். இவற்றையெல்லாம் ஒருங்கிணைக்க தேசிய அளவிலான அணைகள் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்படும். அணைகள் பாதுகாப்பு சட்டத்துக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வல்லுநர்களின் ஆலோசனைகள் கேட்டுப் பெறப்பட்டுள்ளதாக நடுவணரசு தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் மாநில அரசுகளின் உரிமையில் தலையிடும் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment