இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சோ்ந்தவா் சத்யஸ்ரீ ஷர்மிலா. இவா் ஏற்கனவே வழக்கறிஞராவதற்கான தகுதி பெற்றிருந்த போதிலும் திருநங்கைகளுக்கு சமூகத்தில் அங்கீகாரம் கிடைத்த பின்னரே வழக்கறிஞராக பொறுப்பேற்பேன் என்று உறுதியுடன் இருந்தாா். இந்நிலையில் 11 ஆண்டுகளுக்கு பின்னா் சென்னையில் நடைபெற்ற விழாவில் இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞராக சத்ய ஸ்ரீ இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதனைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் பேசுகையில் இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞராக நான் பொறுப்பேற்றதில் மிக்க மகிழச்சி அடைகிறேன் என்றும், "என்னைத் தொடா்ந்து திருநங்கை சமூகத்தைச் சோ்ந்த பலரும் நீதிபதிகளாகவும், வழக்கறிஞா்களாகவும் வரவேண்டும் என்பது எனது விருப்பம். அனைத்து துறைகளிலும் திருநங்கைகள் வெற்றி பெற உதவி செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அவரிடம் பேசிய மூத்த வழக்கறிஞர்கள் பலரும் சத்ய ஸ்ரீ வழக்கறிஞராக மட்டும் அல்லாது நீதிபதியாகவும் உயர வேண்டும் என்று தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்தனர்.
இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞராக சத்ய ஸ்ரீ -பதவியேற்றார்!!
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment