மாவீரன் ஜெ. குருவுக்கு கொங்கு மண்ணில் சிலை வைப்போம்!!! - பொங்கலூர் மணிகண்டன் அறிவிப்பு!!. - Agnipuratchi

மாவீரன் ஜெ. குருவுக்கு கொங்கு மண்ணில் சிலை வைப்போம்!!! - பொங்கலூர் மணிகண்டன் அறிவிப்பு!!.

Share This

வன்னியர் சங்க நிரந்தர தலைவரும் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களின் குரலாக வாழ்ந்தாலும் அனைத்து சமுதாயங்களையும் நேசித்த எளிய மனிதராக வாழ்ந்து வலிமையான தன் எண்ணம் சொல் செயலால் மாவீரன் என்பதை நிரூபித்து  மறைந்தவருமான அண்ணன் ஜெ.குரு அவர்கள் இந்த நூற்றாண்டின் இரும்புமனிதர் என்பதை எல்லோரும் அங்கீகரித்துள்ளார்கள்.
சமூக நீதியை தன் உயிர் மூச்சாக கொண்டு வாழும் மக்கள் காவலர் மருத்துவர் அய்யா அவர்களால்  தன்  மகன் என்று பெருமையோடு பாசத்தால் அன்பால் அழைக்கப்பட்டவர்  மாவீரன் குரு.
மாவீரன் சமுதாயம்,பண்பாடு,கலாச்சாரம்,பாரம்பரியம்,குடும்ப அமைதி,ஒற்றுமை சமூக நீதி இவற்றுக்கு துணிவாக குரல் கொடுத்ததாலும் அரசின் அடக்கு முறைகளுக்கு எதிராக அடிப்பணியாமலும் சமரசம் செய்யாமலும் வாழ்ந்ததாலும் பல ஆண்டுகள் கொடும் சிறையில் அடைக்கப்பட்டவர்.
ஜெயலலிதா -கருணாநிதி அரசுகளால் காட்டுமிராண்டித்தனமான வழக்குகளை நேருக்கு நேர் சந்தித்த ஆண்மகன் மாவீரன் குரு.
தான் பிறந்த வன்னியர் சமுதாயத்தின் பெருமைகளை அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்து காட்டி நேர்மையாக தானும் வாழ்ந்து பிறரையும் வாழ வைக்க வாழ்ந்த மனித நேயம் மிக்க  மாவீரனே ஜெ.குரு.
தான்,குடும்பம்,சுற்றம்,ஊர்,உலகு என ஐவகை கடமைகளை மருத்துவர் அய்யா அவர்களிடம் கற்றுக் கொண்டு சட்டமன்ற உறுப்பினராக இருமுறை பணியாற்றி தன்னை நம்பிய மதித்த மக்களுக்காகவே வாழ்ந்தவர் மாவீரன் குரு.
பெண்களின் பாதுகாப்புக்கும்,பெற்றோர்களின் நிம்மதிக்கும் பொறுப்பேற்றுக் கொண்டவர் மாவீரன் குரு.
அரசியல்,அதிகாரம்,ஆட்சி,தேர்தல்,வாக்கு என்று வந்து விட்டால் எங்கே தாங்கள் பதவிக்கு வர முடியாமல் போய்விடுமோ  என்று அஞ்சியவர்களுக்கு அச்சத்தை கொடுத்து பதவி என்பது ''என்  மயிருக்கு சமம்''என்று வெற்றுப் பேச்சு இல்லாமல் செயல்பட்டு வாழ்ந்து காட்டிய மாவீரன் வன்னியர்களுக்கு ஆபத்து என்றால் தளபதியாய் தலை கொடுக்க வாளெடுக்க  முன்னால் நின்றவர்.
சாதியை சொல்லவே கூச்சப்பட்ட,அச்சப்பட்ட அரசியல்வாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து ''நான் வன்னிய குல சத்திரியன் டா'' என்று சத்தமாக சொன்னவர்.
இளம் போராளி மருத்துவர் அன்புமணியை தமிழகத்தின் முதல்வராக்க வேண்டும் என்ற ஒற்றைக் கனவோடு வாழ்ந்தவர் மாவீரன் குரு.
மருத்துவர் அய்யாவை வாழ்நாள் முழுவதும் தன் தந்தைக்கும் மேலாக தன்னுடைய தெய்வமாக போற்றி வணங்கி விவசுவாசத்தின் விசுவரூபமாக வாழ்ந்து வழிகாட்டியவர் மாவீரன் குரு.
அய்யா சொல்வதை,அய்யா நினைப்பதை,அய்யா விரும்புவதை ஏன்?எனக் கேட்காமல் செய்து முடித்த செயல் வீரர் மாவீரன் அவர்கள்.
அய்யாவிடமிருந்து பிரிக்க ஆயிரம் சதிவலைகளை அரசியல் சக்திகள் பிண்ணியபோதும் அந்த வலைகளை கொண்டே ஓட ஓட விரட்டி அடித்து ''என் மரணத்தால் மட்டுமே மருத்துவர் அய்யாவிடமிருந்து பிரிக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டி அய்யாவின் இதயத்தில் இதயமானவர் மாவீரன்.
ஒரு மாவீரன் மறைந்து விட்டதால் அவர் நேசித்த பாமகவை வன்னியர் குலத்தை மருத்துவர் அய்யாவை அன்புமணியை வீழ்த்திவிடலாம் என்று எவர் கனவு கண்டாலும் அது ஒரு போதும் நிறைவேறாது.
"குரு"என்ற விதை விதைக்கப்பட்டு அது விருட்சமாக  மாறி வீறு கொண்டு எழும் கோடிக்கணக்கான மாவீரன்கள் இனி உருவாவார்கள்.
உடலால் ஒரு எல்லையோடு 
வாழ்ந்த ''குரு மாவீரன்'' இனி எண்ணத்தால்,கருத்தால்,சொல்லால் உலகெங்கும் நிறைந்து ஒவ்வொருவரையும் இயக்கி தன் அன்புத்தம்பி அன்புமணி முதல்வராக பாமக கோட்டையில் ஆட்சி அதிகாரத்தில்
அமர நீக்கமற நிறைந்து வழிகாட்டுவார்.
கொங்கு சீமையின் மீது மிகுந்த அன்பு கொண்ட போராளி,கொங்கு சீமையின் மக்கள் உழைப்பாளிகள் என்று பூரித்து  மகிழ்ந்த மாமனிதன் மாவீரன் குரு இனி ஒரு சமுதாயமக்களின் தலைவன் மட்டுமல்ல ஒட்டுமொத்த சமுதாயத்தின் விடியல் என்பதை போற்றும் வகையில் கொங்கு சீமையில் மாவீரன் குரு அவர்களுக்கு அவரது திரு உருவ சிலை நிறுவப்படும் என்பதையும்,அதற்காக வருகிற 10 .6 .2018  அன்று திருப்பூரில் அனைத்து சமுதாய தலைவர்களின் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பொங்கலூர் இரா.மணிகண்டன்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages