பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் சர்வதேச யோகா தின விழா - Agnipuratchi

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் சர்வதேச யோகா தின விழா

Share This

பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பில் சர்வதேச யோகா  தின விழா திருச்சியில் நடைபெற்றது. விவேகானந்தா உயராய்வு மைய ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி வரவேற்றார். பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் மணிசங்கர் தலைமை வகித்தார். பதிவாளர் கோபிநாத் வாழ்த்துரை வழங்கினார். யோகாசிரியர் விஜயகுமார் சிறப்புரையில், வாழ்க்கையில் உடல், உள நலம் பெற அனைவரும் யோகா பயில வேண்டும். யோகம் என்றால் ஒருங்கிணைத்தல் என்று அர்த்தம் . பதஞ்சலி முனிவர் யோக சூத்திரத்தை எழுதினார். அதில் இயமம், நியமம், ஆசனம், பிராணயாமம், பிரத்யாகாரம், தாரணை, தியானம், சமாதி உள்ளிட்டவை அஷ்டாங்க யோகம் எனப்படும் என்றார். மத்திய அமைச்சக ஆயுஷ் துறை சர்வதேச யோகா தினத்திற்கான வடிவமைத்த யோகா பயிற்சியினை பயிற்சி அளித்தார். கிருஷ்ண மூர்த்தி, லதா உள்ள்ட்டர் இதய நிறைவு தியானப் பயிற்சியினை அளித்தனர்.   நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் லெஷ்மி பிரபா, ஆன்மீக யோக விஞ்ஞான மைய ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராமன், விவேகானந்தா உயராய்வு மைய ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி உள்ளிட்டோர் நிகழ்ச்சிற்கான ஏற்பாட்டினை செய்திருந்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages