பாட்டாளி மக்கள் கட்சியின் 30-ஆம் ஆண்டு விழா தமிழ்நாடு மற்றும் புதுவையில் நாளை மறுநாள் (16.07.2018) சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. 30-ஆம் ஆண்டு தொடக்கவிழாவையொட்டி, சென்னை தியாகராய நகர் பர்கிட் சாலையில் உள்ள பா.ம.க. அலுவலக வளாகத்தில் நாளை மறுநாள் காலை 11.00 மணிக்கு நடைபெறவுள்ள விழாவில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் பங்கேற்றுக் கட்சிக் கொடியை ஏற்றி வைக்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும் பெருமளவில் கலந்து கொள்கின்றனர்.
அதைத் தொடர்ந்து நாளை மறுநாள் மாலை 6.00 மணிக்கு சென்னை அடையாறு எல்.பி. சாலை தொலைபேசி இணைப்பகம் அருகில் பாட்டாளி மக்கள் கட்சியின் 30-ஆம் ஆண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா, பா.ம.க. இளைஞர் அணித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றுகின்றனர். இந்தப் பொதுக்கூட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், துணைப் பொதுச்செயலாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஏ.கே.மூர்த்தி, பொருளாளர் திலகபாமா உள்ளிட்ட தலைவர்களும், மாநில நிர்வாகிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.
சென்னை தவிர தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கட்சியின் 30-ஆம் ஆண்டு விழாவைக் கொண்டாட விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் நடைபெறவுள்ள கொடியேற்று விழா மற்றும் பொதுக்கூட்டங்களில் மாநில துணைப் பொதுச்செயலாளர்கள், துணைத் தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், மாவட்டத் தலைவர்கள், அமைப்புச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளும், துணை அமைப்புகளின் மாநில, மாவட்ட நிர்வாகிகளும் பெரும் திரளாக கலந்து கொள்வார்கள்.
No comments:
Post a Comment