பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது சந்தேகத்திற்கிடமான வகையில் 20.80 லட்சம் ரூபாய்க்கு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்த புகாரில் திண்டுக்கல் அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. - Agnipuratchi

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது சந்தேகத்திற்கிடமான வகையில் 20.80 லட்சம் ரூபாய்க்கு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்த புகாரில் திண்டுக்கல் அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

Share This

கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அதனைத் தொடர்ந்து பழைய நோட்டுகளை மாற்றிக் கொள்ளவும், வங்கிகளில் முதலீடு செய்யவும் கால அவகாசம் அளிக்கப்பட்டது. அப்போது நவம்பர் 14 முதல் 18ஆம் தேதிக்குள் அரசு போக்குவரத்துக் கழக திண்டுக்கல் கிளை சார்பில் அதன் மேலாளர் பாலுசாமி 25.46,520 ரூபாயை கனரா வங்கியில் டெபாசிட் செய்தார். அதில் 20.80 லட்சம் ரூபாய்க்கு பழைய நோட்டுகள் அளிக்கப்பட்டன.

பேருந்து நடத்துனர்கள் 5 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை சில்லறையாக பயணிகளிடம் வசூலித்து அளித்த தொகையை முறைகேடாக 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டாக மாற்றி டெபாசிட் செய்ததாக புகார் கூறப்பட்டது. கமிஷன் தொகை பெற்றுக் கொண்டு நடத்துனர் அழகேசன், கணக்கு பிரிவின் மூத்த கண்காணிப்பாளர் வெள்ளைச்சாமி ஆகியோரும் இதற்கு உதவியதும் தெரியவந்துள்ளது.இது தொடர்பாக விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்பு காவல்துறை 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளது. நம்பிக்கை மோசடி, போலியான ஆவணங்களை காட்டி மோசடி செய்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages