அரசு பள்ளி மாணவர்கள் 25 ஆயிரம் பேருக்கு ஆடிட்டிங் பயிற்சி-செங்கோட்டையன் - Agnipuratchi

அரசு பள்ளி மாணவர்கள் 25 ஆயிரம் பேருக்கு ஆடிட்டிங் பயிற்சி-செங்கோட்டையன்

Share This

ஆரணி அருணகிரி சத்திரத்தில் அரசு நடுநிலைப்பள்ளி திறப்பு விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துக்கொண்டு பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், அரசு பள்ளிகளில் கழிவறைகளை சுத்தம் செய்ய ஆயிரம் வாகனங்கள் வாங்கப்பட உள்ளன. 20 பள்ளிகளுக்கு ஒரு வாகனம் என ஊழியர்கள் நியமிக்கப்பட்டு கழிவறைகள் சுத்தம் செய்யப்படும்" என்று தெரிவித்தார். மேலும் அவர் அறிவித்த வாக்குறுதிகள் இதோ 
ஜி.எஸ்.டி.யை எதிர்கொள்ளும் வகையில் 25 ஆயிரம் மாணவர்களுக்கு ஆடிட்டிங் பயிற்சி (சி.ஏ.) அளிக்கப்படும். 
1, 6, 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டத்தில் செல்போனில் பாடங்களை பதிவிறக்கம் செய்து பாடம் நடத்தும் முறை கொண்டுவரப்படும். 
தமிழகத்தில் 3 ஆயிரம் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் கொண்டுவரப்படும். 1 லட்சம் ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டங்கள் குறித்து கற்பித்தல் பயிற்சி அளிக்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages