மகளிருக்கான உலகக் கோப்பை ஹாக்கி தொடர், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள இந்திய அணி, லீக் சுற்றில் 3-வது இடத்தைப் பிடித்தது. இதையடுத்து, நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய போட்டியில், இத்தாலி அணியை எதிர்கொண்டது._
இத்தாலிக்கு எதிரான ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
வெள்ளிக்கிழமை நடைபெறும் காலிறுதியில் அயர்லாந்தை இந்தியா எதிர்கொள்ள உள்ளது.
உலகக் கோப்பை ஹாக்கித் தொடரில், இந்திய மகளிர் அணி, 40 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் முறையாக காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. இதற்கு முன்னதாக 1978-ம் ஆண்டில் காலிறுதிக்கு முன்னேறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment