தமிழகத்தில் ஜி.எஸ்.டி. மூலம் ரூ.60 ஆயிரம் கோடி வருவாய் - Agnipuratchi

தமிழகத்தில் ஜி.எஸ்.டி. மூலம் ரூ.60 ஆயிரம் கோடி வருவாய்

Share This

ஜி.எஸ்.டி. மூலம் தமிழகத்திற்கு கடந்த 11 மாத காலத்தில் 60 ஆயிரத்து 430 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. ஜி.எஸ்.டி. நடைமுறைக்கு வந்து ஓர்ஆண்டு நிறைவடைந்ததையொட்டிஜி.எஸ்.டி மற்றும் மத்திய கலால் வரித்துறை சார்பில் கடந்த 1-ந்தேதி முதல் நேற்று வரை வார விழா கொண்டாடப்பட்டது. விழாவின் கடைசி நாளான நேற்று ஜி.எஸ்.டி மற்றும் மத்திய கலால் வரித்துறையின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல முதன்மை தலைமை கமிஷனர் சி.பி.ராவ் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு பின் கடந்த 2017 ஜூலை மாதம் முதல் கடந்த மார்ச் மாதம் வரையிலான 9 மாத காலத்தில் மாநில அரசுக்கு 26 ஆயிரத்து 227 கோடி ரூபாயும், மத்திய அரசுக்கு 24 ஆயிரத்து 745 கோடி ரூபாயும் என மொத்தத்தில் 50 ஆயிரத்து 972 கோடி ரூபாய் வருவாய் கிடைத்து உள்ளது. மேலும் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் 9 ஆயிரத்து 458 கோடி ரூபாய் வருவாய் கிடைத்து உள்ளது. அந்தவகையில் மொத்தம் 60 ஆயிரத்து 430 கோடி வருவாய் கிடைத்து இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages