சென்னை உட்பட 30 இடங்களில் நடைபெறும் வருமானவரி சோதனையில் ரூ.80 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.முன்னதாக விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் சாலை ஒப்பந்ததாரரின் வீடு, அலுவலங்களில் வருமானவரித்துறை சோதனை நடந்து வருகிறது. செய்யாத்துரை என்பவருக்குச் சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். எஸ்.பி.கே நிறுவனத்துக்கு சொந்தமான 30 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் அண்ணாநகர், போயஸ்கார்டன் உள்பட எஸ்.பி.கே நிறுவனத்துக்கு சொந்தமான 5 இடங்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நெடுஞ்சாலைப்பணி ஒப்பந்ததாரர் செய்யாதுரை வரி ஏய்ப்பு செய்துள்ளதாக புகார் எழுந்திருந்தது.
ஆதலால் எஸ்.பி.கே. கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் 30 வங்கிக் கணக்குகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நெடுஞ்சாலைப் பணி ஒப்பந்ததாரர் செய்யாதுரை கல்குவாரியிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.300-க்குட் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மதுரையில் எஸ்.பி.கே நிறுவனத்துக்கு சொந்தமான ஓட்டலில் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. 5 பேர் கொண்ட வருமானவரித்துறை அதிகாரிகள் குழு சோதனை செய்து வருகிறது.
இதற்கிடையே சுமார் 6 மணி நேரம் நடைபெற்ற சோதனையில், ஒப்பந்ததாரர் செய்யாதுரை நிறுவனத்தில் மூட்டை மூட்டையாக பணம் சிக்கியுள்ளது. முதல்கட்டமாக ரூ. 80 கோடி எண்ணி முடிக்கப்பட்டுள்ளது. மூட்டை மூட்டையாக பணம் கிடைத்துள்ளதால் அதிகாரிகள் எண்ணுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ரூபாய் நோட்டு எண்ணும் கருவி வரவழைக்கப்பட்டு பணத்தை அதிகாரிகள் எண்ணுகின்றனர். எஸ்.பி.கே நிறுவனத்தில் பதுக்கப்பட்ட பணத்தை பார்த்து அதிகாரிகள் வியப்படைந்துள்ளனர்.
இதனிடையே தமிழ்நாட்டில் சாலைப் பணிக்கான ரூ.3,000 கோடி ஒப்பந்தத்தை எஸ்.பி.கே பெற்றுள்ளது. ரூ. 200 கோடியில் மதுரை வட்டச்சாலை அமைத்து 18 ஆண்டுக்கு சுங்கவரி வசூலிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. வண்டலூர் - வாலாஜாபாத் 6 வழிச்சாலை பணிக்கு ரூ.200 கோடி ஒப்பந்தம் எஸ்.பி.கே பெற்றுள்ளது. நெல்லை - செங்கோட்டை சாலை அகலப்படுத்தும் ரூ. 407 கோடி ஒப்பந்தம் எஸ்.பி.கே பெற்றுள்ளது.
No comments:
Post a Comment