ஆதார் இணைப்புடன் கூடிய நேரடி பரிவர்த்தனை மூலம் ஏறத்தாழ 90 ஆயிரம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளதாக தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைவர் சத்திய நாராயணா தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஆதார் திட்டத்திற்காக 10 ஆயிரம் கோடி செலவிடப்படவிலை என்று கூறினார். ஆனால் பொதுவிநியோக திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களுக்கு ஆதார் மூலம் போலி பயனாளிகள் களையப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
அதன் மூலம் அபிரிவிதமான பணம் சேமிக்கப்பட்டு என்றும், 2018 மார்ச் 31-ம் தேதி கணக்குப்படி சுமார் ரூ.90,012 கோடி சேமிக்கப்பட்டுள்ளது என்று கூறினார். 121 கோடி பேருக்கு ஆதார் கார்டு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதன் மூலம் 3 கோடி மின் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளது என்றும் சத்திய நாராயண கூறினார். ஆதார் பயன்பாடு மூலம் பல்வேறு முறைகேடுகள் குறைந்துள்ளதாக அவர் கூறினார்.
No comments:
Post a Comment