தமிழகத்திற்கு கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 5 லட்சத்து 10 ஆயிரம் கோடி வழங்கியது மோடி அரசு என்றும், காங்கிரஸ் அரசு குறைந்த நிதியே வழங்கியது என்றும் பா.ஜ., தலைவர் அமித் ஷா ஆவேசமாக பேச்சு. - Agnipuratchi

தமிழகத்திற்கு கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 5 லட்சத்து 10 ஆயிரம் கோடி வழங்கியது மோடி அரசு என்றும், காங்கிரஸ் அரசு குறைந்த நிதியே வழங்கியது என்றும் பா.ஜ., தலைவர் அமித் ஷா ஆவேசமாக பேச்சு.

Share This

சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் நடக்கும் பா.ஜ., ஓட்டுச்சாவடி பொறுப்பாளர் கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது: தமிழகத்தில் பா.ஜ., கட்சி ஆட்சி அமைக்கும். இதற்கு தொண்டர்கள் உறுதி ஏற்க வேண்டும். என்னைப் போன்ற கட்சி நிர்வாகிக்கு இன்றைய தினம் மகத்துவமான நாள். தமிழகத்திற்கு நான் வரும் போதெல்லாம் எதிர்ப்பாளர்கள் கேலியும், கிண்டலும் செய்தனர். தமிழகத்தில் 2019 மார்ச் மாதத்துக்குள் பா.ஜ., எங்கிருக்கிறது என பார்ப்பீர்கள்._

_விருந்தினருக்கு விருந்தோம்பல் செய்து காத்திருப்பவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் இருக்கும் என்பது வள்ளுவர் வாக்கு. எனக்கு எதிர்ப்பு தெரிவிப்பர்கள் வள்ளுவர் வாக்கை அறிய வேண்டும். 2014ல் தமிழக மக்கள் மோடிக்கு ஆதரவு வழங்கினார்கள். மோடிக்கு ஆதரவு தெரிவித்ததற்காக தமிழக மக்களுக்கு இருகரம் கரம் கூப்பி வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்._

_மோடி அரசு 10 கோடி ஏழை மக்களுக்கு வீடு வழங்கும் முயற்சியில் உள்ளது. 11 கோடி உறுப்பினர்களுடன் உலகின் மிகப்பெரிய கட்சியாக பா.ஜ., உள்ளது. மோடி அரசின் மக்கள் சேவையினால் பா.ஜ., மேலும் வளர்ந்து கொண்டிருக்கிறது._

_70 ஆண்டுகளில் முந்தைய அரசுகள் செய்யாததை, 4 ஆண்டுகளில் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு செய்திருக்கிறது. முந்தைய அரசுகளை விட மோடி தலைமையிலான அரசு தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளது. நீர்பாசன திட்டம், சென்னை மெட்ரோ மற்றும் மோனோ ரயில் திட்டம், மதுரை எய்ம்ஸ் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக இதுவரை தமிழகத்திற்கு 4 ஆண்டுகளில், 5 லட்சத்தி 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது._

_ஊழல், சாதிவாதம் மற்றும் வாரிசு அரசியலை முடிவுக்கு கொண்டு வந்தது மோடி அரசு. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஊழல் மலிந்து கிடந்தது. ஆனால் மோடி ஆட்சியில் எதிர்ப்பாளர்களால் கூட ஒரு ஊழல் குற்றச்சாட்டை சொல்ல முடியாது. ஊழல் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம். தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சியை கொண்டு வர பா.ஜ., உறுதியேற்கும். இவ்வாறு அவர் பேசினார்._

_பா.ஜ., கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய பா.ஜ., தலைவர் அமித்ஷா மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிரசாரத்தில் கையாண்ட ஸ்டைலை பின்பற்றினார். அவர் தமிழகத்திற்கு மோடி அரசு அதிக நிதி வழங்கியுள்ளது. ஆனால் கடந்த காலத்தில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி மத்திய ஆட்சியில் இருந்தபோது தமிழகத்திற்கு என்ன செய்தது என மக்களாகிய நீங்கள் கணக்கு கேட்பீர்களா, கேட்பீர்களா ? என கேட்டார். தமிழகத்தில் மோடி ஆட்சி கொண்டு வருவோமா ? , வருவீர்களா ? தேஜ கூட்டணி ஆட்சி அமைய முயற்சி மேற்கொள்வோமா ? வெற்றியின் உறுதிமொழியை உரக்க சொல்லுங்கள். இவ்வாறு அமித்ஷா பேசினார். இந்த பேச்சு மறைந்த ஜெ.,யின் செய்வீர்களா ? செய்வீர்களா ? என்று பிரசாரத்தில் கேட்பதை நினைவூட்டுவதாக இருந்தது._

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages