தொழில் புரிவதற்கு உகந்த மாநிலங்களில் ஆந்திராவிற்கு முதலிடம் - Agnipuratchi

தொழில் புரிவதற்கு உகந்த மாநிலங்களில் ஆந்திராவிற்கு முதலிடம்

Share This

மத்திய நிறுவன கொள்கை மற்றும் மேம்பாட்டு துறையும் உலக வங்கியும் இணைந்து ஆண்டு தோறும் மாநிலங்களுக்கு இடையே போட்டித்தன்மையை அதிகரிக்கவும் முதலீடுகளை ஈர்க்கவும் தொழில்புரிவதற்கான சூழலை மேம்படுத்தவும் இந்தப் பட்டியல் வெளியிட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் ஆந்திர மாநிலம் 98.42 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை தக்க வைத்துள்ளது. தெலங்கானா மாநிலம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்கள் சேர்ந்து முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 2017ம் ஆண்டுக்கான பட்டியலில் 95.93 சதவீத மதிப்பென்களுடன் தமிழகம் 15வது இடத்தில் உள்ளது. 3வது இடத்தில் ஹரியானா மாநிலமும், நான்காவது இடத்தில் ஜார்கண்ட் மாநிலமும் 5வது இடத்தில் குஜராத் மாநிலமும் உள்ளன. இதனை தொடர்ந்து, நாடுகளுக்கு இடையே தொழில் புரிவதற்கு உகந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 100வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages