பா.ஜ அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தார்மீக அடிப்படையில் திமுக ஆதரவு : ஸ்டாலின் அறிக்கை - Agnipuratchi

பா.ஜ அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தார்மீக அடிப்படையில் திமுக ஆதரவு : ஸ்டாலின் அறிக்கை

Share This

மத்திய பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு திமுக தார்மீக அடிப்படையில் முழு ஆதரவளிக்கும் என செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க வாய்ப்பு இல்லாவிட்டாலும், தார்மீக அடிப்படையில் திமுக முழு ஆதரவு அளிக்கும் என குறிப்பிட்டுள்ளார். எதிர்கட்சிகள் கொண்ட வந்திருக்கம் நம்பிக்கையில்லா தீர்மானம் ஒரு திருப்பு முனை என அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார். நாட்டு மக்களை ஏமாற்றி வெற்றி பெற்ற மோடி, இந்துத்துவா பிடியில் சிக்கியுள்ளார். நாடாளுமன்ற விவாதங்களில் பிரதமர் மோடி பங்கேற்பதில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பலகோடி பேர் வேலையிழந்துள்ளனர். நாட்டின் பன்முகத் தன்மையை பாரதிய ஜனதா அரசு சீரழித்துவிட்டது. 

ஊழலை ஒழிப்பதாக உறுதியளித்த பாரதிய ஜனதா லோக்பால் அமைப்பை கூட உருவாக்கவில்லை என ஸ்டாலின் சாடியுள்ளார். தமிழகத்தின் உரிமைகளை மத்திய அரசு பறித்து கொண்டிருக்கிறது. பாரதிய ஜனதா அரசின் 4 ஆண்டு கால ஆட்சியில் தமிழகம் அனைத்து துறைகளிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. எனவே நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக-வும் ஆதரிக்க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages