கர்நாடகத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கொட்டி வரும் கனமழையால் கபினி அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. தென்மேற்கு பருவமழை கடந்த மாதம் முதல் வாரத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கொட்டியது. இதனை தொடர்ந்து மழை படிப்படியாக குறைந்ததை அடுத்து கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது. இந்நிலையில் நேற்று இரவு முதல் காவிரி் நீர்பிடிப்பு பகுதிகளான கிடுகு, ஹசன் மாவட்டங்களில் மீண்டும் கனமழை கொட்டி வருகிறது. இதனால் கிடுகு மாவட்டத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து காலை நிலவரப்படி விநாடிக்கு 2,505 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து 3,470 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கபினி அணைக்கு நீர்வரத்து 14,000 கனஅடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 15,000 கனஅடியாக உள்ளது. 2,284 கனஅடி கொண்ட கபினி அணையில் 2,282 கனஅடிக்கு நீர் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Home
அண்மை செய்திகள்
காவேரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை-கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் உபரி நீர் வெளியேற்றம்
காவேரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை-கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் உபரி நீர் வெளியேற்றம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment