சிறைக்கு செல்வதிலிருந்து தப்பிக்க விஜய் மல்லையா மேற்கொள்ளும் முயற்சி - Agnipuratchi

சிறைக்கு செல்வதிலிருந்து தப்பிக்க விஜய் மல்லையா மேற்கொள்ளும் முயற்சி

Share This

வங்கிகளிடம் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்த வழக்கில் சிக்கிய தொழிலதிபர் விஜய் மல்லையா, தற்போது லண்டனில் உள்ளார். இந்நிலையில் லண்டனில் நடந்து வரும் விஜய் மல்லையா மீதான வழக்கின் விசாரணையில், இன்னும் சில வாரங்களில் தீர்ப்பு⚖ வெளியாக உள்ளது. இது மல்லையாவுக்கு எதிராக அமையும் பட்சத்தில், அவர் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு வழக்கை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அவ்வாறு அவர் இந்தியா வரும் பட்சத்தில் அவர் சிறைக்கு செல்ல வேண்டியிருக்கும். இதனால் அவர் முன்னதாகவே தற்போது இந்தியா திரும்ப விரும்புவதாகவும் கடன்களை அடைப்பதற்கான திட்டம் வகுக்கத் தயாராக உள்ளதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தைநடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த பேச்சுவார்த்தை மல்லையா சிறை⛓ தண்டனையில் இருந்து தப்பிக்கவே முன்னெச்சரிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages