வதந்திகளை பரப்பி மீனவர்களின் வாழ்கையில் யாரும் விளையாட வேண்டாம் - அமைச்சர் வேண்டுகோள் - Agnipuratchi

வதந்திகளை பரப்பி மீனவர்களின் வாழ்கையில் யாரும் விளையாட வேண்டாம் - அமைச்சர் வேண்டுகோள்

Share This

சென்னையில் விற்பனையாகும் மீன்களில் ரசாயன கலந்திருப்பதாக எங்குமே கண்டறியப்படவில்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ரசாயனம் கலக்கப்படுதாக யாரோ வதந்தி பரப்புவதாக புகார் தெரிவித்துள்ளார். தேவைக்கும் குறைவாகவே மீன்கள் பிடிக்கப்படுவதால் ஃபார்மலின் பயன்படுத்த வேண்டிய அவசியம் தமிழக மீனவர்களுக்கு இல்லை. மீன்களை பதப்படுத்த ஐஸ்கட்டிகள் மட்டுமே பயன்படுத்தப்படுவதாக கூறினார். எனவே மீன் உணவுகளை அச்சமின்றி அனைவரும் உண்ணுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

மேலும் பேசிய அவர் மீன்களில் ரசாயனம் கலக்கப்பட்டிருப்பதாக தேவையில்லாமல் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. எனவே வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். யாரும் மீனவர்களின் வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம். ஏற்கனவே மீனவர்களின் வாழ்வாதாரம் மோசமாக இருக்கிறது. இது வதந்தி என்பதை மக்கள் உணர வேண்டும் என கூறினார். மீன்களில் ரசாயனம் கலக்கப்பட்டிருப்பதாக சந்தேகம் எழுந்தால், மீன்வளப் பல்கலைகழகத்திற்கு மீன்களை கொண்டு சென்று ஆய்வுக்குட்படுத்தி கொள்ளலாம் என்றார். வெளிமாநிலத்திலிருந்து வரும் மீன்களில் ஃபார்மலின் கலந்திருந்தால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages