கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலில் போட்டியிடுவோம்-டிடிவி தினகரன் - Agnipuratchi

கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலில் போட்டியிடுவோம்-டிடிவி தினகரன்

Share This

மக்களுக்கு எதிரான திட்டங்களை எடப்பாடி பழனிசாமி செயல்படுத்துவதாக குற்றம் சாட்டிய டிடிவி தினகரன், கொள்ளையடித்த பணம் தான் ஒப்பந்ததாரர் வீட்டில் சிக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, பிரதமர் மோடி நடவடிக்கை எடுப்பார் என்ற பயம் எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளதாக சென்னை பெசன்ட் நகரில் பேட்டியளித்த டிடிவி தினகரன் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர்முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு என்ன நடக்கபோவது என்று எனக்கு தெரியும். பழனிசாமியை முதல்வராக்கியது சசிகலா தான். வருமானவரி சோதனையில் சிறிய அளவு தான் பிடிப்பட்டுள்ளது, பிடிபடாத பணம் ஏராளமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து, எடப்பாடி ஆட்சியை மத்திய அரசு தாங்கி பிடிக்கக்கூடாது என்றும், கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலில் போட்டியிடுவோம் என்றும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages