காவல்நிலையங்களில் புகார்களை ஆன்லைனில் பெறும் வசதி-உயர்நீதிமன்றம் உத்தரவு. - Agnipuratchi

காவல்நிலையங்களில் புகார்களை ஆன்லைனில் பெறும் வசதி-உயர்நீதிமன்றம் உத்தரவு.

Share This

புகார்களை ஆன்லைனில் பதிவு செய்ய தேவையான வசதியை அனைத்து காவல் நிலையங்களிலும் 6 மாதத்திற்குள் ஏற்படுத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. காவல் நிலையங்களில் அளிக்கப்படும் புகார் மனுக்களின் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை எனக் கூறி, மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணகுமார், கொடுக்கப்படும் புகார்கள் மீது காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்ய அறிவுறுத்தி, டிஜிபி அறிக்கை அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டார். தனது சுற்றறிக்கையை பின்பற்றுகிறார்களா என்பதை குழு அமைத்து டிஜிபி கண்காணிக்க வேண்டும் என்றும், இதுதொடர்பான அறிக்கையை வருகிற ஆகஸ்டு 2 ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி ஆணையிட்டிருக்கிறார். மேலும், போலீஸ் விசாரணையின் நிலை குறித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு பதிவுத் தபால், இமெயில் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்க வேண்டும் என்றும் ஆணையிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages