சென்னை சார் - பதிவாளர் அலுவலகம் முற்றுகை..!! - Agnipuratchi

சென்னை சார் - பதிவாளர் அலுவலகம் முற்றுகை..!!

Share This

சென்னை விருகம்பாக்கம் சார் - பதிவாளர் அலுவலகம், கிண்டிக்கு மாற்றப்படுவதை கண்டித்து, பத்திரம் எழுதும் கடை உரிமையாளர்கள், சார் - பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.விருகம்பாக்கம், ஆற்காடு சாலை, பள்ளிக்கூடம் தெருவில், விருகம்பாக்கம், சார் - பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு, விருகம்பாக்கம், சாலிகிராமம், வளசரவாக்கம், நெற்குன்றம், மதுரவாயல், நெசப்பாக்கம் பகுதி மக்கள் பயன்படுத்துகின்றனர்.கடந்த, 37 ஆண்டுகளாக, இந்த பகுதியில் சார் - பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்நிலையில்,இடவசதி இல்லாத காரணத்தால், கிண்டியில் உள்ள வாடகை கட்டடத்திற்கு, இந்த அலுவலகம் மாற்றப்படுவதாக, பதிவு துறை அறிவித்தது.நேற்று முன்தினம் இரவு, விருகம்பாக்கம் சார் - பதிவாளர் அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள், கிண்டிக்கு எடுத்துச் செல்லும் பணியில், அதிகாரிகள் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சார் - பதிவாளர் அலுவலகத்தை சுற்றி உள்ள, 45 கடை உரிமையாளர்கள், சார் - பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.விருகம்பாக்கம் போலீசார் சமரசம் பேசினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages