ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் ஸ்டிரைக் - Agnipuratchi

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் ஸ்டிரைக்

Share This

இலங்கை சிறை பிடித்துள்ள மீனவர்களையும், பல கோடி மதிப்பிலான படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி, ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் துவக்குகின்றனர். ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளில் இருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் 16 பேரை இலங்கை கடற்படை சமீபத்தில் சிறைபிடித்து சிறையில் அடைத்தது. இவர்களின் 3 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் ரூ.40 கோடி மதிப்பிலான 184 படகுகள் விடுவிக்கப்படாத நிலையில், மேலும் :woman-rowing-boat:3 படகுகளை பறிமுதல் செய்ததால் கடலுக்கு செல்ல மீனவர்கள் தயங்குகின்றனர்.ராமேஸ்வரம் துறைமுக கடற்கரை அந்தோணியார் ஆலயத்திருவிழாவை முன்னிட்டு விசைப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்குச் செல்லவில்லை. அவர்களது சங்கத்தினர் இன்றைய குறித்து நேற்று கூட்டத்தினை நடத்தி, இலங்கை பாராளுமன்றத்தில் தமிழக இலங்கை பாராளுமன்றத்தில் தமிழக மீனவர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட புதிய சட்டத்தை இந்திய அரசு கண்டித்து, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் வரை ஸ்ட்ரைக் தொடரும் என்று முடிவெடுத்தனர். மேலும் இலங்கை கையகப்படுத்திய படகுகள் சேதமடைந்துள்ளதால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் படகுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages