ஈரோடு மாவட்டத்தில் 50 கிராமங்கள்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது ஆய்வு செய்தபின் முதல்வர் பழனிசாமி பேட்டி - Agnipuratchi

ஈரோடு மாவட்டத்தில் 50 கிராமங்கள்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது ஆய்வு செய்தபின் முதல்வர் பழனிசாமி பேட்டி

Share This

காவிரி, பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் ஈரோடு மாவட்டத்தில் 50 கிராமங்கள்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 7,000 பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.வெள்ளபாதிப்பை ஆய்வு செய்தபின் முதல்வர் பழனிசாமி பேட்டி. ஈரோடு மாவட்டத்தில் வெள்ளத்தால் 1,976 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

முகாம்களில் தங்கியிருப்பவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதரப்பட்டுள்ளன, ஈரோட்டில் 67 முகாம்களில் 2335 பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் உள்ளவர்களுக்கு உணவு, குடிநீர், பால், மருத்துவ வசதி செய்யப்பட்டுள்ளது.

ஈரோட்டில் வெள்ளத்தால் 1976 வீடுகள் பாதிப்படைந்துள்ளது. 263 வீடுகள் முழுவதுமாக சேதமடைந்துள்ளது 609.69 ஹெக்டர் பயிர்கள் மற்றும் 806 விவசாயிகள் வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளனர்.

குடிமராமத்து திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிப்படைந்தவர்களுக்கு நிரந்தர அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தரப்படும் என்றார் - முதலமைச்சர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages