நாடு முழுவதும் மாநில அரசுகளால் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வழங்கப்படும் இடஒதுக்கீடு 50 சதவீதத்துக்கும் மிகாமல் இருக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு கடந்த 1992ம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. ஆனால் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சிறப்பு தீர்மானத்தின்படி, தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 69 சதவீத இடஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த 69% இடஒதுக்கீடு முறையால் தங்களுக்கு மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கவில்லை எனக்கூறி சென்னையை சேர்ந்த 2 மாணவியர் சஞ்சனா, அகிலா ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் மாணவிகளின் இடைக்கால மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் இடஒதுக்கீட்டுக்கு எதிரான மூல வழக்கு நவம்பர் மாதத்தில் விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
மருத்துவ படிப்பில் 69% இடஒதுக்கீட்டிற்கு எதிரான மனு தள்ளுபடி -உச்சநீதிமன்றம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment