இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்கவிழா வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் களை கட்டியது. 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை தொடங்கி செப்டம்பர் 2 ஆம் தேதி வரை ஜகார்த்தா மற்றும் பாலம்பெங் நகரில் நடைபெறுகிறது. 45 நாடுகள் கலந்து கொள்ளும் இதன் தொடக்க விழா ஜகார்த்தாவில் வண்ணமயமாக கலைநிகழ்ச்சிகளுடன் கோலகலமாக நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, போட்டிகளில் பங்கேற்கும் நாடுகளின் வீரர், வீராங்கனைகள் தங்களது தேசிய கொடிகளுடன் அணிவகுத்தனர். இந்தியா சார்பில் 572 வீரர், வீராங்கனைகள் மொத்தம் 36 போட்டிகளில் பங்கேற்கின்றனர். பளு தூக்குதலில் பதக்க நம்பிக்கை தரும் தமிழகத்தை சேர்ந்த நட்சத்திர வீரர் சதீஷ் சிவலிங்கம் இடம் பெற்றுள்ளார். துப்பாக்கிசுடுதலில் காயத்ரி, டென்னிஸ் போட்டியில் ராம்குமார் ராமநாதன் உள்ளிட்டோர் களமிறங்க இருக்கின்றனர். ஞாயிற்றுகிழமை முதல் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. ஞாயிற்றுகிழமை பிற்பகல் நடைபெற உள்ள பேட்மின்டன் போட்டியில் இந்தியா - மாலத்தீவு வீரர்கள் மோத உள்ளனர்.
No comments:
Post a Comment