தி.மு.க. வில் போட்டியின்றி தலைவராகிறார் ஸ்டாலின், பொருளாளராக துரைமுருகன் தேர்வு! - Agnipuratchi

தி.மு.க. வில் போட்டியின்றி தலைவராகிறார் ஸ்டாலின், பொருளாளராக துரைமுருகன் தேர்வு!

Share This

தி.மு.க தலைவர் கருணாநிதி வயது மூப்பின் காரணமாக மரணமடைந்தார். கடந்த 50 வருடமாக அவர் பதவி வகித்து வந்த நிலையில், தற்போது அவரது தி.மு.க தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, இன்று அந்த தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று நடைபெற்றது. மாலை 4 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், காலை மு.க ஸ்டாலின் வேட்பு மனுத்தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் வேட்புமனுத்தாக்கல் செய்யவில்லை.

இதனால், திமுக தலைவராக மு.க ஸ்டாலின் போட்டியின்றி தேர்வாகிறார். நாளை மறுநாள் (ஆகஸ்ட் 28) அதிகாரப்பூர்வமாக பொதுக்குழுவில் அறிவிக்கப்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தி.மு.க.வின் இரண்டாவது தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வேட்புமனு தாக்கலுக்கு பிறகு அண்ணன் ஸ்டாலினுக்கு பாசத்துடன் வாழ்த்து சொன்ன தங்கை கனிமொழி  மு.க ஸ்டாலினின் அரசியல் பயணம்

1968 இளைஞர் மன்றம்

1971 மாவட்டப் பிரதிநிதி

1973 பொதுக்குழு உறுப்பினர்

1976 மிசா கைது ஓராண்டுச்சிறை

1982 இளைஞரணி அமைப்பு செயலர்

1989 MLA

1996 Mayor

2003 துணைப் பொதுச்செயலாளர்

2006 அமைச்சர்

2008 பொருளாளர்

2009 துணைமுதல்வர்

2016 எதிர்க்கட்சி தலைவர்

2017 செயல் தலைவர்

2018 திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் திமுகவின் அடுத்த பொருளாளராக துரைமுருகன் MLA தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

திமுகவின் பொருளாளர் பதவி என்பது அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. கருணாநிதி, MGR, ஆற்காடு வீராசாமி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் இருந்ததை வைத்தே அது எவ்வளவு முக்கியம் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages