தமிழ் வழி கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை-செங்கோட்டையன் - Agnipuratchi

தமிழ் வழி கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை-செங்கோட்டையன்

Share This

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள காவலர் குடியிருப்பு வளாகத்தில் ரூ.55 இலட்சம் செலவில் புதியதாக காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டுவிழா கலெக்டர் கதிரவன் தலைமையில் இன்று நடந்தது. அதில் அடிக்கல் நாட்டிய செங்கோட்டையன் பேசுகையில், தமிழுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கான ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் காமராஜர் பிறந்த நாளை நினைவுபடுத்தும் வகையில் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 960 மாணவ, மாணவியருக்கு ரூ.20 ஆயிரம் வீதமும், உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் 960 பேருக்கு ரூ.10 ஆயிரம் வீதமும் இந்த ஆண்டு வழங்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages