மனநலம் பாதிக்கப்பட்ட நபரை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த காவல்துறை
இராமேஸ்வரத்தில் சுற்றி திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட 30 வயதுடைய இக்பால் என்பவர் மனோலயா என்ற மறுவாழ்வு மையத்தினரால் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனாக அவர் தனது பெயர் இக்பால் என்றும்¸ 5 ஆண்டுகளுக்கு முன்பு கேரளா மாநிலத்திலிருந்து வழி தவறி வந்ததாகவும் கூறினார். இதன் அடிப்படையில் தமிழக காவல்துறையின் மாநில குற்ற ஆவண காப்பகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தமிழக மாநில குற்ற ஆவண காப்பக காவல்துறை கூடுதல் இயக்குநர் திருமதி.சீமா அகர்வால் இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் திருமதி.தாகிரா அவர்கள் சம்மந்தபட்ட காப்பகம் சென்று இக்பால் என்பவரிடம் விசாரித்த பின்னர் கிடைத்த சிறு தகவலின் அடிப்படையில் கேரளா காவல்துறையினரை தொடர்பு கொண்டு விசாரணை செய்ததில் அவர் பாலக்காட்டில் உள்ள ஒட்டபாலம் பகுதியை சேர்ந்த சிஜ்ஜி என்பவரின் சகோதரர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து இக்பால் குறித்து அவரது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 03.08.2018-ம் தேதியன்று தமிழகம் வந்த அவரது சகோதரரிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர். 5 ஆண்டுகளுக்கு பின்பு குடும்பத்தாருடன் சேர்த்து வைத்த காவல்துறையினருக்கு அவரது சகோதரர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
No comments:
Post a Comment