கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பு ஸ்ரீநாத் என்ற வாலிபர் ரூ.25 லட்சம் மதிப்பு கொண்ட பைக்கில் மொபைல் போனில் பேசியபடி சென்றுள்ளார். அப்போது, அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீசார், அந்தப் பைக்கை நிறுத்தி ஆவணங்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த அந்த வாலிபர், அங்கிருந்து தப்பித்துச் செல்ல முயற்சித்துள்ளார். இதையடுத்து, அவரை மடக்கிப் பிடித்த போலீசாருக்கும், ஸ்ரீநாத் என்ற வாலிபருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, அவரை தாக்கியுள்ளனர். தொடர்ந்து அவரை கைது⛓ செய்து 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதன் பிறகு, அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர், பிரபல துணிக்கடை உரிமையாளரின் மகன் என்பது தெரியவந்துள்ளது. அவர் நடுரோட்டில் போலிஸாருடன் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதோ அதன் பதிவு உங்களுக்காக
போலீசாருடன் மோதலில் இறங்கிய வாலிபர் கைது-வீடியோ
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment