வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு உதவும் வகையில் சில ✈வெளிநாடுகள் அறிவித்துள்ள நிவாரண நிதியை ஏற்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. தாய்லாந்திற்கான இந்திய தூதர் சாம் தனது ட்விட்டர் பக்கத்தில் இதனை தெரிவிக்கும் வகையில் கருத்து பதிவிட்டுள்ளார். முன்னதாக கடந்த 2004ம் ஆண்டு முதல் இயற்கை பேரிடரின் போது நிவாரணமாக பிற நாடுகள் அளிக்கும் நிதியை பெறுவதில்லை என இந்தியா கொள்கை முடிவெடுத்தது. இதன்படி கேரளாவிற்கு நிதி உதவி அளிப்பதாக அறிவித்துள்ள வெளிநாடுகளின் உதவியை பெற மத்திய அரசு விரும்பவில்லை என தெரிகிறது. இந்நிலையில் கேரளாவிற்கு ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி வெள்ள நிவாரண நிதி தருவதாக அறிவித்துள்ளது. கத்தார் மற்றும் மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளும் கேரளாவிற்கு நிதி உதவி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கேரளாவிற்கான ✈வெளிநாடுகளின் நிதி உதவியை ஏற்க மத்திய அரசு மறுப்பு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment